1800 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி 3,000 கோடி அமெரிக்க டாலர மிச்சப்படுத்தப் போகும் கோகோ கோலா!
அட்லாண்டா : சர்வதேச அளவில் குளிர்பானங்கள் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள கோகோ கோலா நிறுவனம் 3 கோடி அமெரிக்க டாலர்களை மிச்சம் செய்வதற்காக உலக அளவில் தனது நிறுவனங்களில் பணிபுரியும் 1800 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் இ-மெயிலின் மூலம் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது சர்வதேச அளவில் கோகோ கோலா விற்பனையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும் கோகோ கோலா தயாரிப்பு விலையும் அதிகரித்துள்ளதன் காரணத்தினால் நிறுவனத்திற்கு சமீபகாலமாக தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது.

அந்த அறிக்கையில் நிறுவன தலைமை உயர் அதிகாரி முஹ்தார் கென்ட் குறிப்பிட்டுள்ளதாவது நிறுவனம் 3 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது.
அதன் ஒருபகுதியே 1600 முதல் 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பது ஆகும். இது சர்வதேச அளவில் தங்கள் நிறுவன்ததில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 1 சதவீத அளவே ஆகும். இந்த 1800 ஊழியர்களின் பணிநீக்கத்தினால் நிறுவனத்தின் பணிகள் சிறிதளவும் பாதிக்கப்படாது என்று கென்ட் அதில் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 31, 2013 ஆம் தேதிப்படி கோகோ கோலா நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் 130600 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications