வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு தங்க முட்டையிடும் வாத்து.. செப்டம்பரில் வாயை பிளக்க வைத்த மதிப்பு
டெல்லி: நாட்டில் பல லட்சம் மக்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள். தங்க நகை கடனும், கிரெடிட் கார்டு கடனும் கிட்டத்தட்ட ஒரே அளவு இருக்கும். அந்த அளவிற்கு கிரெடிட் கார்டு கடன்கள் அதிகமாக உள்ளது. இந்த கிரெடிட் கார்டு கடன்கள் தான் வங்கிகளுக்கு தங்க முட்டை போடும் வாத்து.. பணம் கொட்டும் விஷயமாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கிரெடிட் கார்டு மூலமாக கடன் பெற்ற தொகை ரூ.2.17 லட்சம் கோடியாகும். இதில் வட்டியாக மட்டும் தோராயமாக மட்டும் கணக்கிட்டால் ₹3,500 கோடி முதல் ₹4,500 கோடியாக இருக்கும்.
கிரெடிட் கார்டு கடன் என்பது அனைத்து வங்கிகளும் ஆர்வமுடன் வழங்கும் கடன் ஆகும். இந்த கடன் மிக குறுகிய காலத்திற்கு பணம் செலுத்தும் வசதி தருகிறது. கிரெட் கார்டு மூலமாக பயன்படுத்தும் பணத்திற்கு வட்டி விதிக்கப்படும். இது வாங்குபவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெறலாம். பின்னர் அதை தவணைகளில் திருப்பிச் செலுத்த அனுமதிக்கிறார்கள்.

50 நாட்கள் வட்டியில்லா கடன்
அதேநேரம் கிரெடிட் கார்டுகளை பொறுத்தவரை 50 நாட்கள் வட்டியில்லா கடன் என்று சொல்லாம். நீங்கள் ஒன்றாம் தேதி வாங்கிய கடனை வட்டியே இல்லாமல் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் திரும்ப செலுத்தவேண்டும். ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதிக்குள் வாங்கிய கடனை, அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் கட்டுவதாக இருக்கும். ஒரு சில வங்கிகள் இந்த தேதியை மட்டும் மாற்றி இருக்கும். ஒருவேளை குறிப்பிட்ட தேதியில் கடனை கட்ட முடியவில்லை என்றால் தான் 3.5 சதவீதம் வட்டி அதற்கு கட்ட வேண்டியதிருக்கும். இது தான் வங்கிகளுக்கு பணம் கொட்டும் விஷயமாக இருக்கிறது.
செப்டம்பரில் ரூ.2.17 லட்சம் கோடி கடன்
நாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் கடன் தொகையும் தினமும் உயா்ந்து வருகிறது. இதுகுறித்து தனியார் பங்கு தரவு மதிப்பீடு நிறுவனமாக கேர் ரேட்டிங்ஸ் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் கடந்த செப்டம்பர் மாதத்தில் கிரெடிட் கார்டு மூலமாக செலவிடுவது 23 சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ.2.17 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர்.
நவராத்திரி பண்டிகை காரணம்
செப்டம்பரில் ஒரு கார்டில் இருந்து தோராயமாக ரூ.19 ஆயிரத்து 144 செலவிடப்பட்டு இருப்பதாகவும் இது அதற்கு முந்தைய மாதத்தை விட 12.2 சதவீதம் அதிகம் என்றும் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22-ந்தேதி நடைமுறைக்கு வந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம், பண்டிகை காலம் காரணமாக இந்தநிலை ஏற்பட்டதாக புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத நிறைவில், கிரெடிட் கார்டு கடன் நிலுவை தொகை ரூ.2.82 லட்சம் கோடியாக இருந்தது என்றும் இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பதிவான ரூ.2.72 லட்சம் கோடியை விட அதிகம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் தொகை மற்றும் நுகர்வு அதிகரித்திருந்தாலும் கடன் தொகையை திரும்ப செலுத்துவதும் சீராக இருப்பதாகவும் கேர் ரேட்டிங்ஸ் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications