டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்தது!!
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், டீசல் விலை நிர்ணயம், இன்னும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
இருப்பினும், டீசல் உற்பத்தி செலவுக்கும், சில்லறை விற்பனை விலைக்கும் இடையிலான வேறுபாடு நீங்கும்வரை, மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் வீதம் டீசல் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.

தேர்தல் முடிந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், நேற்று டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது. உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு மெட்ரோ நகரிலும் விலை உயர்வில் வேறுபாடு காணப்பட்டது.
அதன்படி சென்னையில், டீசல் விலை லிட்டருக்கு 71 காசுகள் உயர்ந்தது. அதாவது விலை ரூ.60.50-ல் இருந்து ரூ.61.21 ஆக உயர்ந்தது.
டெல்லியில், ரூ.56.71 ஆக இருந்த டீசல் விலை, 57 காசுகள் உயர்ந்து, ரூ.57.28 ஆகவும், கொல்கத்தாவில், ரூ.61.38 ஆக இருந்த டீசல் விலை, 59 காசுகள் உயர்ந்து, ரூ.61.97 ஆகவும் உயர்ந்தது.
மும்பையில், ரூ.65.21 ஆக இருந்த டீசல் விலை, 63 காசுகள் உயர்ந்து, ரூ.65.84 ஆனது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications