இன்னும் இரு ஆண்டுகளில் 8 சதவீத வளர்ச்சியை எட்டிவிடுவோம் - மான்டேக்சிங் அலுவாலியா
டெல்லி: அடுத்த இரு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சியை எட்டிவிடும் என மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் நேற்று 34-வது ஸ்கோச் (SKOCH) மாநாடு நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8 சதவீதத்தை எட்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தின் முதல் ஆண்டில் 5 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த இலக்கு 8 சதவீதமாகும்.

முதலில் குறைவாக இருந்தாலும்...
திட்டக்குழுவின் கணிப்புப்படி 12-வது திட்ட காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். இருப்பினும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த கணிப்பைத் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் திட்டக்குழு வெளியிடும்.
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி விகிதம் மேம்படும் என நம்புகிறோம். முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாவது பாதியில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்போது ஒட்டுமொத்தமாக வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டும்," என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications