EPFO: பென்ஷன் தொகை 7.5 மடங்கு உயரபோகுது.. மத்திய அரசின் புதிய திட்டம்.. அடிதூள்!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் ஓய்வூதிய அமைப்பில் பெரிய மாற்றங்கள் உருவாக உள்ளது, மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் EPFO அமைப்பு பல மாற்றங்களை செய்ய திட்டமிட்டு வருகிறது. மாத சம்பளக்காரர்களின் நிதி பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, பிஎப் பணத்தை எளிதாகப் பெறும் வசதிகளையும் கொண்டு வரப்படுகிறது.

நாடு முழுவதும் கோடிக்கணக்கான சம்பள ஊழியர்களின் சேமிப்பை நிர்வகிக்கும் Employees' Provident Fund Organisation (EPFO) அமைப்பு, இரண்டு முக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

PF pension EPFO EPF Pension Hike EPS-95 Minimum Pension Increase EPFO ATM Withdrawal PF Claim Settlement 2026 E-PRAAPTI Portal EPF minimum pension hike to 7500 EPS-95 pension increase 2026 EPFO ATM PF withdrawal 8 25 EPF interest rate EPFO record claims 8 31 crore PF advance withdrawal faster processing E-PRAAPTI portal activate old PF account EPF digital initiatives 2026 government pension revision EPS labour unions demand pension hike parliamentary committee EPF recommendation April 2026 EPFO 61 lakh claims UAN linked PF account reactivation EPFO automation claim settlement PF money access simplified ATM EPS-95 2026 E-PRAAPTI 7500 EPS-95 2026 8 25 8 31 E-PRAAPTI 2026 61 UAN

7.5 மடங்கு அதிக ஓய்வூதியம்

Employees' Pension Scheme (EPS-95) திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,000 மட்டுமே. மக்களின் வாழ்க்கைமுறை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த தொகை போதாது என்ற விமர்சனம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து பலக்கட்ட ஆலோசனைக்கு பின்பு, இந்த தொகையை ரூ.7,500 ஆக உயர்த்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுகிட்டத்தட்ட 7.5 மடங்கு உயர்வு.

இந்த உயர்வுக்கு தொழிற்சங்கங்கள் பலமாக ஆதரவு அளித்து வருகின்றன. மேலும், நாடாளுமன்ற குழுவும் இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது அமல்படுத்தப்பட்டால், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும்.

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 58 வயதுக்குப் பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க 1995-இல் தொடங்கப்பட்டது. இந்த பென்ஷன் தொகை நீங்கள் பணியாற்றிய நிறுவனம் செலுத்தும் பங்களிப்பிலிருந்து 8.33% இதற்காக ஒதுக்கப்படுகிறது, மேலும், 10 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை செய்தவர்கள் இதன் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாக உள்ளனர்.

நீங்கள் EPF-ல் சேரும்போது, தானாகவே இந்த திட்டத்தில் உறுப்பினராகிவிடுவீர்கள் என்பதால் தனியாக எவ்விதமான கணக்குகளை துவங்க தேவையில்லை. நீங்கள் பணியாற்றும் காலத்தில் உங்கள் சம்பளத்தில் 12% EPF-க்குச் செல்லும்போது, நீங்கள் பணியாற்றும் நிறுவனம் செலுத்தும் தொகையில் 8.33% EPS-க்கு செல்கிறது.

நீங்கள் 58 வயதை பூர்த்தி செய்த உடன் ஓய்வூதியம் பெற தகுதி பெற்றுவீர்கள். இத்தகைய ஒய்வூதிய தொகை உங்களுடைய சேமிப்பு தொகையில் இருந்து தற்போது குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகப்படியாக 15000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச அளவான 1000 ரூபாயை 7500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

பி.எப் பணம் எடுப்பது இனி எளிதாகும்

மக்கள் தங்களுடைய PF பணத்தை பெறுவதில் உள்ள சிக்கல்களை குறைக்கும் வகையில், ATM மூலம் பணத்தைப் பெறும் வசதியை அறிமுகப்படுத்த EPFO அமைப்பு கடந்த ஒரு வருடமாக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இது செயல்பாட்டுக்கு வந்தால், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதைப் போலவே பிஎப் தொகையையும் உடனடியாக பெற முடியும்.

அவசர சூழ்நிலைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். குறிப்பாக 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் உள்ள மக்களுக்கு இது பெரிய நிவாரணமாக இருக்கும். இந்த சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என EPFO தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

வட்டி விகிதம்

EPFO கணக்குகளில் இருக்கும் பணத்திற்கு தற்போது மத்திய அரசு சுமார் 8.25% வட்டி வழங்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு நிதி அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் நிலுவையில் உள்ளது. இந்த வட்டி விகிதம் அமலுக்கு வந்தால் குறைந்த ஆபத்து கொண்ட முதலீடுகளில் ஒன்றாக பிஎப் சேமிப்பு திட்டம் தொடர்ந்து இருக்கும்.

2025-26 நிதியாண்டில் EPFO மொத்தம் 8.31 கோடி கோரிக்கைகளை தீர்வு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 6.01 கோடியை விட கணிசமான உயர்வு. இதன் மூலம் மக்கள் நிதி தேவைக்காக பிஎப் சேமிப்பை அதிகம் பயன்படுத்துவது உறுதியாகியுள்ளது.

மேலும் பயன்பாட்டில் இல்லாத பழைய பிஎப் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த, EPFO 'E-PRAAPTI' என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் அடிப்படையில் பழைய கணக்குகளை இணைத்து செயல்படுத்தும் இந்த வசதி, வேலை மாற்றியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+