அத்தியாவசிய மருந்துகளுக்கு ஆகஸ்ட் வரை ஜிஎஸ்டி வரி இல்லை

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அத்தியாவசிய மருந்துகளின் விலை ஆகஸ்ட் மாதம் வரை உயர்த்தப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்த விலையிலேயே மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என மருந்து விற்பனை துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் 5%, 12%, 18%, 28% என்னும் நான்கு விகிதங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 0% என்னும் வரி விகிதத்தின் கீழ், உணவுப் பொருட்கள், கல்வி, மற்றும் மருத்துவ சேவைகளுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளுக்கு ஜிஎஸ்டி

மருந்துகளுக்கு ஜிஎஸ்டி

ஜிஎஸ்டியில் இன்சுலின் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருந்துவ உபகரணங்களுக்கு 5 சதவீதம் வரியும்,அத்தியாவசிய மருந்துகளுக்கு 12 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் அமல்

ஜூலை 1 முதல் அமல்

ஜிஎஸ்டி வரி முறை ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன் விளைவாக பல்வேறு பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது சில பொருட்கள் விலை குறைந்துள்ளது , பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

மறுபரிசீலனை செய்யப்படுமா?

மறுபரிசீலனை செய்யப்படுமா?

இந்த வரி விகிதங்கள் நான்காக பிரிக்கப்பட்டதற்கு, பல்வேறு விமர்சனங்களும், புகார்களும் எழுந்தன. வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்யக்கோரியும் பலதரப்புகளில் இருந்தும் குரல் எழுப்பப்பட்டது.

ஆகஸ்ட் வரை பழைய விலை

ஆகஸ்ட் வரை பழைய விலை

இதனிடையே ஆகஸ்ட் மாதம் வரை, ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்த விலையிலேயே மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என மருந்து விற்பனை துறையினர் தெரிவித்துள்ளனர்.

பழைய சரக்குகள்

பழைய சரக்குகள்

மருந்து கடை விற்பனையாளர்கள் வாங்கி வைத்துள்ள அத்தியாவசிய மருந்துகளை பழைய விலையிலேயே விற்கலாம் என்றும் வாங்கி வைத்த சரக்குகள் விற்று தீர்ந்த உடன், வாங்கும் புதிய சரக்குகளை ஜிஎஸ்டி,வரியுடன் விற்பனை செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Patients can continue to buy essential medicines at the pre-GST MRP, that is, not at the increased prices, till new batches arrive at pharmacies and stockists, and reach retail shelves.
Please Wait while comments are loading...