பொங்கல் பண்டிகை: காய்கறி விலை கிடு கிடு- மக்கள் கவலை
நெல்லை: பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் நாளை கொண்டாடப்படவிருக்கிறது. போகிப் பண்டிகையான இன்று மக்கள் பழைய பொருட்களுக்கு தீயிட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறி விலை உயர்ந்துள்ளது.
அதன் விவரங்களை பார்ப்போம்.

நெல்லை
நெல்லையில் உள்ள நயினார் குளம் மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. காய்கறிகளை வாங்க வாடிக்கையாளர்கள் மொத்தமாக குவிந்ததால் மார்க்கெட் முழுவதும் கடும் கூட்டம் நிலவுகிறது. பொங்கல் படி கொடுப்பதற்காக பலரும் மூட்டை மூட்டையாக காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

முருங்கை
காய்கறிகளில் முருக்கைகாய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.160 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை மார்க்கெட்டுக்கு முருங்கைகாய் சாத்தான்குளம், திசையன்விளை பகுதியில் இருந்து அதிக அளவு வரும். இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு வரவு இல்லாததால் தட்டுப்பாடு காரணமாக விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு குஜராத்தில் இருந்து முருங்கைகாய்கள் இறக்குமதி செய்யப்பட்டு ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிறுகிழங்கு
மற்ற காய்கறிகளில் சிறுகிழங்கு கிலோ ரூ.45க்கு விற்கப்படுகிறது. இது கடந்த வாரம் ரூ.25க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிலோ சேம்பு ரூ.50, கத்தரிக்காய் ரூ. 40, தக்காளி ரூ.12, பீன்ஸ் ரூ. 35, அவரை ரூ. 32, பூசணி ரூ.12, பாகற்காய் ரூ. 30, புடலங்காய் ரூ. 20, மிளகாய் ரூ. 28, வெங்காயம் ரூ. 40, பல்லாரி ரூ. 25, மாங்காய் ரூ. 60, எலுமிச்சை ரூ. 40, உருளைகிழங்கு ரூ.30 என விற்கப்படுகிறது.

தக்காளி
தக்காளி விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் அதை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மற்ற காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications