அரை பவுன் இருந்தாலும் போதும்.. தலைமுறைக்கு போதும்! தங்கம் என்னைக்குமே தங்கம் தான்.. இவ்வளவு விலையா?
நியூயார்க்: உலக அளவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தற்போது புதிய சாதனை அளவை எட்டி இருக்கிறது. சீனாவுக்கு எதிரான டிரம்பின் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3382 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. வரும் காலத்தில் 3500 டாலரை தாண்டலாம் எனவும் கூறப்படுகிறது. சர்வதேச வர்த்தகத்தில் அவுன்ஸ் அடிப்படையில் தான் தங்க வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு அவுன்ஸ் என்பது 28.34 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 லட்சத்து 88 ஆயிரத்து 741 ரூபாய் 71 பைசாவாக உள்ளது.
உலக அளவில் பொருளாதார பிரச்சனைகள் அல்லது போர் உள்ளிட்ட அரசியல் நிலைகுலைவுகள் ஏற்படும் போது பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்றதாக தங்கம் இருக்கிறது. தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் 2025ம் ஆண்டில் அனைத்து முதலீட்டு வாய்ப்புகளையும் மிஞ்சும் வகையில் பொன் விலை 28% உயர்வடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 45%க்கும் அதிகமாக வளர்ச்சி பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
கடந்தாண்டு 2800 டாலரில் இருந்த தங்கத்தின் விலை தற்போது 3382 டாலரை கடந்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் அதாவது 28.34 கிராம் தங்கத்தின் விலை3318 டாலராக இருந்த நிலையில் தற்போது 3382 டாலராக புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் 8 கிராம் என்ற சவரன் மதிப்பில் வாங்கப்படுகிறது. அதன்படி இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 74,461.35 ரூபாயாக இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்தே உலக அளவில் வர்த்தகத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது. குறிப்பாக அவர் மேற்கொண்ட வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அளவிலான பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. குறிப்பாக ட்ரம்பு தலைமையிலான அமெரிக்கா சீனாவுடன் உள்ள வர்த்தக தொடர்புகளை கடுமையாக கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு 245% வரிவிதிப்பு விதிக்கப்பட்டுள்ளது.
இது வர்த்தகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்கா பயன்படுத்தும் முக்கிய கனிமங்களின் இறக்குமதிகளை சோதிக்கவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரிவிலக்கு மோசடி பட்டியல் அமெரிக்காவின் வரிவிதிப்புகளையும் தாண்டி புற நாடுகள் எப்படி பொருட்களை அனுப்புகிறது என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. நாணய மதிப்பை செயற்கையாக குறைத்தல், ஏற்றுமதி சலுகைகள், போலி பொருட்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வரிவிலக்குகளை தவிர்க்க முயற்சிகள் கண்டறியப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக இந்த பட்டியலும் வரிவிதிப்பும் இணைந்து சீனாவுக்கு எதிரான நிதிநிலை கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி இருக்கிறது. உலக அளவில் வர்த்தகம் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அதே நேரத்தில் டாலர் குறியீட்டு மதிப்பும் 98 என மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவுக்கு சரிந்துள்ளதாலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து இருக்கிறது.
இதனால் டாலரின் மதிப்பு குறைந்து தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக யுத்தம் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், அதன் தாக்கம் உலகளாவிய பொருளாதாரத்திலும் முதலீடு பொருட்களிலும் தெளிவாக காண முடிகிறது. தங்கம் இப்போது பாதுகாப்பான முதலீடாக மட்டுமில்லாமல் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்படும் பிரதான பொருளாகவும் மாறி இருக்கிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications