தங்கம் விலை 10% உயர்வு.. அட்சய திருதியை பண்டிகைக்கு முன் ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

தங்கம் வாங்க சிறந்த நாளாக கருதப்படும் அட்சய திருதியை பண்டிகை நெருங்கும் நிலையில், பலரும் தங்கம் வாங்குவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது. வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் நகைகளை காட்டிலும் தங்க காயின், தங்க பார்கள் ஆகியவற்றை அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதை தாண்டி தங்கம் தற்போது முக்கிய முதலீடாக மாறியுள்ளது. மேலும் தங்கம் தற்போது டாலர் மதிப்பு உயர்வு, பத்திர முதலீடு போன்றவற்றால் மந்தமாக இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Gold Price Surge 2026 Akshaya Tritiya Gold Buying MOFSL Gold Report Buy Gold on Dips Gold ETF India Trend 2026 MOFSL ETF gold price akshaya tritiya 2026 akshaya tritiya gold buying 2026 gold price rise 10 percent 2026 motilal oswal gold report 2026 buy gold on dips strategy gold investment outlook 2026 india gold etf demand central bank gold purchases 2025 geopolitical tensions gold price us interest rate impact gold 2026 akshaya tritiya gold price prediction long term gold returns india gold safe haven 2026 gold volatility akshaya tritiya india jewellery demand 2026 2026 2026 10 2026 2026 2026 2025 2026 2026 2026

2026 ஆம் ஆண்டில் இதுவரை தங்கத்தின் விலை சுமார் 10% உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவோருக்கு விலை உயரும் என நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது. இதேவேளையில் முன்னணி முதலீட்டு நிறுவனமும் முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.

சென்னை தங்கம் விலை (ஏப்ரல் 2026) மாதம் முழுவதும் உயர்வை பதிவு செய்துள்ளது. 24 கேரட் தங்கம் ஏப்ரல் 1 அன்று ரூ.15,327 இருந்தது, ஏப்ரல் 18 அன்று ரூ.15,666 ஆக உயர்ந்தது. 22 கேரட் தங்கம் ரூ.14,050 இலிருந்து ரூ.14,360 ஆக உயர்ந்தது. மாதத்தின் அதிகபட்ச விலை ஏப்ரல் 16ஆம் தேதி பதிவாகியுள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக தங்கம் விலை சுமார் 2.21% உயர்ந்துள்ளது.

அட்சய திருதியை ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏப்ரல் 20, திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்த திதி ஏப்ரல் 19, 2026 அன்று காலை 10:49 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 20, 2026 அன்று காலை 07:27 மணிக்கு முடிவடைகிறது.

Motilal Oswal Financial Services Ltd வெளியிட்ட அறிக்கையின்படி, தங்க தற்போது போர் பதற்றங்கள், உலக பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் அமெரிக்க வட்டி விகித மாற்றங்களின் உறுதியற்ற நிலை ஆகியவை தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றுகின்றன. இருப்பினும், அமெரிக்க டாலர் வலிமை மற்றும் அதிகரித்த பத்திர வருமானம் ஆகியவை தங்க விலையை குறைக்கும் முக்கியமான காரணியாக இருந்து வருகிறது.

இந்தியாவில் அதிகப்படியான தங்க விலை காரணமாக மக்கள் நகை வாங்குவது குறைந்து வருகிறது. இதனால் உள்ளூர் சந்தையில் தங்கத்தை ப்ரீமியம் விலையில் விற்கும் நிலை மாறி தள்ளுபடி விலைகளிலும் விற்கப்படுவதை காணப்படுகின்றன. அதே நேரத்தில் சீனாவில் முதலீட்டு நோக்கில் தங்க தேவை அதிகரித்து வருகிறது. மேலும் ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகள் தங்கம் ஏற்றுமதியை முடக்கியுள்ளது.

இதேபோல் தங்கத்தில் முதலீடு செய்யும் முறையிலும் தற்போது பெரிய மாற்றம் உருவாகியுள்ளது. நகை சீட்டு, தங்க சேமிப்பு போன்றவற்றை விடுத்து மக்கள் ETF போன்ற நிதி வடிவங்களில் முதலீடு செய்யும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் உலோக தங்கத்திற்கான டிமாண்டும் குறைய துவங்கியுள்ளது.

பணவீக்கம், நாணய மதிப்பு குறைவு மற்றும் உலகளாவிய அசாதாரண நிலைகளுக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுகிறது. மேலும் அட்சய திருதியை பண்டிகைகளில் வாங்கப்படும் தங்கம், நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தை வழங்கி வரும் காரணத்தால் இந்த ஆண்டு தங்கம் விற்பனை சிறப்பாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

குறுகிய காலத்தில் தங்க விலை பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் சிறிய ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானாலும் நீண்ட கால அடிப்படையில் அதித லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+