Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது வெறும் தொடக்கம் தான்.. தாறுமாறாக சரியும் தங்கம் விலை.. கதறும் நகை வியாபாரிகள்.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே படுவேகமாகச் சரிந்து வருகிறது. 3 நாட்களில் மட்டும் சர்வதேச சந்தையிலேயே கிட்டத்தட்ட 13% சரிந்துள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் கூட தங்கம் சார்ந்து பிஸ்னஸ் செய்வோர் விலை எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஏன் தங்கம் விலை இப்படி குழப்புகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த ஜனவரி 28ம் தேதி வரலாறு காணாத உச்சத்தைப் பதிவு செய்தது. அன்றைய தினம் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 5480 டாலருக்கு போனது. இதன் எதிரொலியாகவே சென்னையில் மறுநாள் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.17 ஆயிரம் வரை போனது. அதன் பிறகு தான் தங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது.

Gold Rate is seeing dramatically fall in last few days Customers are happy but jewelers are confused

சர்வதேச சந்தை

மறுநாள் ஜனவரி 29ம் தேதியே தங்கம் விலை அவுன்ஸுக்கு 5100 டாலர் வரை சரிந்தது. அது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கவே ஜனவரி 30ம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்குக் கிட்டத்தட்ட 950 ரூபாய் வரை சரிந்தது. பிறகு அன்றைய தினமே ஏறி 5300 டாலர் வரை போனது.. ஒரு கட்டத்தில் 5450 டாலரை கூட நெருங்கியது. இதனால் எங்கு மீண்டும் தங்கம் விலை உயருமே என மக்கள் அஞ்சினர். ஆனால், இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. அன்றைய தினமே 5130 டாலர் வரை சரிந்தது.

கடந்த ஜனவரி 30ம் தேதி பல வாரங்களுக்குப் பிறகு ஒரு அவுன்ஸ் தங்கம் 5000 டாலருக்கு கீழ் குறைந்தது. 4800 டாலரில் அன்று வர்த்தகம் முடிந்தது. இது இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கவே ஜனவரி 31ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் பல ரூ.15000க்கு கீழ் வந்தது. அதன் பிறகு இரு நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் சர்வதேச தங்க மார்கெட் இல்லை.

Gold Rate is seeing dramatically fall in last few days Customers are happy but jewelers are confused

மிக பெரிய சரிவு

இன்றும் கூட காலையில் சர்வதேச சந்தையைத் தொடங்கிய உடனேயே சட்டென குறைந்தது. இன்று ஒரே நாளில் மட்டும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிட்டத்தட்ட 3% வரை குறைந்துள்ளது. இப்போதும் கூட தங்கம் விலை தொடர்ந்து சரிந்தே வருகிறது. தங்கம் விலையை உயர்த்த முயற்சிகள் நடந்தாலும் கூட விற்பனை அதிகமாக இருப்பதால் விலை தொடர்ந்து குறைகிறது.

காரணம்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பாவெல் பதவிக்காலம் முடியும் நிலையில், புதிய தலைவர் யார் என்பதில் குழப்பம் நிலவியதே தங்கம் இந்தளவுக்கு உயரக் காரணமாக இருந்தது. கெவின் வார்ஷை டிரம்ப் தலைவராக நியமித்த உடனேயே தங்கம் விலை சரிய ஆரம்பித்துள்ளது. அடுத்து பதவிக்கு வரவுள்ள வார்ஷ், டிரம்பின் ஆதரவாளர் தான் என்றாலும் கூட டிரம்ப் சொல்வதைக் கேட்டு அப்படியே வட்டி விகிதத்தைக் குறைத்துவிட மாட்டார். பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டே வட்டி விகிதம் சார்ந்த முடிவுகளை எடுப்பார்.

வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை என்றால் டாலர் மதிப்பு உயர்ந்து, தங்கம் விலை சரியும் அதுவே இப்போது நடந்துள்ளது. வார்ஷ் நியமனமே தங்கம் விலை சரியக் காரணம் என்றாலும் கூட குறுகிய காலத்தில் இந்தளவுக்கு விலை சரிவதை அது நியாயப்படுத்தவில்லை என்கிறார் KCM தலைமை வர்த்தக ஆய்வாளர் டிம் வாட்டர்!

நகை வியாபாரிகள்

பொதுவாக பிட்காயின் அல்லது பங்குச்சந்தைகள் தான் நிமிடத்திற்கு நிமிடம் பெரிய ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். தங்கத்தில் இதுபோல பெரிய ஏற்ற இறக்கம் இருக்காது என்பதாலேயே பலரும் அதில் முதலீடு செய்வார்கள். ஆனால், இப்போது தங்கம் விலையே அதை மிஞ்சும் அளவுக்குக் குறுகிய நேரத்தில் 100 டாலர் வரையும் ஏறி இறங்குகிறது.

இதுபோல தங்கம் விலை ஏறி, இறங்கிக் கொண்டு இருந்தால் அதில் முதலீடு செய்வதே ரிஸ்க் ஆகிவிடும். மேலும், இப்படி சில நாட்களில் சர்வதேச சந்தையில் 13% வரை தங்கம் விலை சரிந்துள்ள நிலையில், அதுவும் கூட தங்க வியாபாரிகளைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் தங்க பிஸ்னஸில் கூட நஷ்டம் ஏற்படும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+