ஜிஎஸ்டி: ஜூலை மாத வரி வசூல் ரூ. 96,483 கோடி - ரூ.3,026 கோடி வரி ஏய்ப்பு
நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் 96 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் 96 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வாயிலாக ஜூலை மாதத்துக்கான அரசின் வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில், ஜிஎஸ்டியில் ரூ.3,026 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் வசூலான ஜிஎஸ்டியை காட்டிலும் ஜூலை மாதம் 2467 கோடி ரூபாய் கூடுதலாக 96 ஆயிரத்து 483 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலான மொத்த எண்ணிக்கை 66 லட்சமாக உள்ளது. ஏப்ரல், மே மாதங்ககளுக்கான இழப்பீடாக மாநில அரசுகளுக்கு 3 ஆயிரத்து 899 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஜிஎஸ்டியாக ரூ.15,877 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,293 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.49,951 கோடியும், செஸ் வரியாக ரூ.8,362 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.96,483 கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. இறக்குமதிக்காக ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ரூ.24,852 கோடியும், செஸ் வரியில் ரூ.794 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்கான வரித் தாக்கலில், மொத்தம் 66 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 64.69 லட்சமாகவும், ஏப்ரல் மாதத்தில் 62.46 லட்சமாகவும் இருந்தது. மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பொறுத்தவரையில், ஏப்ரல் முதல் மே வரையில் மொத்தம் ரூ.3,899 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், "2017 ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதிலிருந்து 2018 ஜூன் மாதம் வரையில் மொத்தம் 1,205 வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.3,026 கோடியாகும். மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 487 வழக்குகளில் மொத்தம் ரூ.1,320 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஜிஎஸ்டி வாயிலாக அரசு ரூ.96,483 கோடியை வசூலித்திருந்த நிலையில், மறுபுறம் அதிகளவில் வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அரசால் வசூலிக்கப்பட்டுள்ள மொத்த வரியில் ரூ.500 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட தொழில் நிறுவனங்களின் பங்கு மட்டும் 79.5 சதவிகிதமாக இருப்பதாக ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications