ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய நவ.30 வரை காலக்கெடு நீட்டிப்பு
ஜிஎஸ்டி ஜூலை மாத கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி தேதியை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நடைமுறைகளில் சில சிக்கல்கள் இருந்ததால் வணிகர்கள் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் விற்பனை கொள்முதல் என தனியாக ஜிஎஸ்டிஆர் 1, ஜிஎஸ்டிஆர் 2 மற்றும் ஜிஎஸ்டிஆர் 3 என மூன்று படிவங்களாக தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
ஜூலை மாதத்திற்கான இந்த படிவங்களை தாக்கல் செய்ய இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டிஆர் படிவங்கள் தாக்கலுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர் 1 படிவத்தை அக்டோபர் 31க்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கொள்முதலுக்கான ஜிஎஸ்டிஆர்- 2 படிவத்தை அக்டோபர் 31ம் தேதக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிதியாண்டின் இரண்டாவது (ஜூலை மாத) கணக்குகளை தாக்கல் செய்ய அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை சுமார் 12 லட்சம் நிறுவனங்கள் கணக்குகளை தாக்கல் செய்துள்ளன.
தற்போது இதற்கான காலக்கெடு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே மொத்த கணக்கையும் குறிப்பிடும் ஜிஎஸ்டிஆர் 3 படிவத்தை நவம்பர் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் சுமார் 30 லட்சம் தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு நிதியாண்டின் போதும் நான்கு தவணைகளாக வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று வர்த்தகர்களும் தொழில் துறையினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், ஜூலை மாத கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி தேதியை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதேபோல், மூன்றாவது காலாண்டு கணக்குளை தாக்கல் செய்யும் தேதியும் நவம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 11ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications