ஜிஎஸ்டி வரி குறைந்தாலும்.. அத்தியாவசிய பொருட்களின் விலை குறையாது! நிறுவனங்கள் எடுத்த முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பு ஏற்பட்டாலும் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று FMCG நிறுவனங்கள் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. FMCG என்பது வேகமாக விற்பனை ஆக கூட அத்தியாவசிய பொருட்கள் ஆகும்.

இந்த குறைந்த மதிப்புள்ள பொருட்களின் சில்லறை விலையை குறைக்க முடியாது என்று மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியத்திடம் (CBIC) இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறைப்பு காரணமாக விலையை குறைத்தால், அது நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். மாறாக, பேக் அளவுகளை அதிகரிப்பதாக நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

ரூ. 5, ரூ. 10, ரூ. 20 போன்ற குறிப்பிட்ட விலை புள்ளிகளில் விற்கப்படும் பிஸ்கட், சோப்பு, பற்பசை தயாரிப்பாளர்கள், இந்த விலைகளை குறைப்பது இந்திய சந்தையில் சாத்தியமில்லை என்கிறார்கள். உதாரணமாக, முன்பு 18% ஜி.எஸ்.டி உடன் ரூ. 20க்கு விற்கப்பட்ட பிஸ்கட்டின் ஜி.எஸ்.டி செப்டம்பர் 22 க்குப் பிறகு 5% ஆக குறையும். இதனால் அதன் விலை ரூ. 17.80 அல்லது ரூ. 18 ஆக குறைய வேண்டும்.

நாள்தோறும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ரூ. 18 என்பது சரியான விலையாக இருக்காது. இந்திய நுகர்வோர் ரூ. 5, ரூ. 10, ரூ. 20 விலையிலான பொருட்களை வாங்கப் பழகிவிட்டனர். இந்த அமைப்பை நாங்கள் மாற்ற விரும்பவில்லை என்று இந்த நிறுவனங்கள் நினைக்கின்றன.

ஜிஎஸ்டி வரி மாற்றும் - விலையை குறைக்க முடியாது

இந்த நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், "விலையை அப்படியே வைத்துக்கொண்டு, பேக் செய்யப்பட்ட பொருளின் அளவை அதிகரிக்கலாம். உதாரணமாக, ரூ. 20 பிஸ்கட் பேக்கின் அளவு அதிகரிக்கும்," என்றார். பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரிஷப் ஜெயின், ஜி.எஸ்.டி பலன்களை நுகர்வோருக்கு முழுமையாக கொண்டு சேர்க்க, பேக்குகளின் எடையை அதிகரிப்போம் என்று தெரிவித்தார்.

GST slabs changes many not benefit people Prices of many products may not go down

நிதி அமைச்சக அதிகாரிகள், FMCG நிறுவனங்கள் கூடுதல் லாபம் ஈட்டுவதைத் தடுக்க, இது போன்ற பொருட்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினர்.

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பு

இந்த சீர்திருத்தங்கள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. ஆனால், வரவிருக்கும் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து மேலும் விவாதிக்கப்படும். புதிய ஜிஎஸ்டி 2.0 அமைப்பு வாங்குபவரை எவ்வாறு பாதிக்கும்? தற்போதைய நிலையில், 350 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு 28% வரி மற்றும் கூடுதலாக 3% செஸ் சேர்த்து, மொத்தம் 31% வரி விதிக்கப்படுகிறது. சிறிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு செஸ் இல்லாமல் 28% வரி விதிக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பு சிறிய திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு வரியை 18% ஆக குறைக்கும். அதேசமயம், 350 சிசி-க்கு மேல் உள்ள பைக்குகளுக்கு 40% சிறப்பு வரி விதிக்கப்படும்.

நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களான UHT பால், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட பன்னீர், பிட்சா ரொட்டி, காக்கரா, சப்பாத்தி மற்றும் ரொட்டி போன்றவற்றுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் தனது பூஜ்ஜிய வரி வரம்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் 5% மற்றும் 18% வரிவிதிப்பில் இருந்த அத்தியாவசியப் பொருட்களுக்கு இனி வரி விலக்கு அளிக்கப்படும்.

இதேபோல், முன்பு 18% வரிவிதிக்கப்பட்ட பராட்டா மற்றும் பரோட்டா ஆகியவையும் பூஜ்ஜிய வரி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. வரி விகிதங்களை சீரமைக்கும் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்வி சார்ந்த பொருட்களும் இந்த வரி குறைப்பினால் பெரிதும் பயனடையவுள்ளன.

ஜிஎஸ்டி வரி சீரமைப்பு

வரைபடங்கள், ஹைட்ரோகிராஃபிக் விளக்கப்படங்கள், அட்லஸ்கள், சுவர் வரைபடங்கள், உலக உருண்டைகள், அச்சிடப்பட்ட கல்வி விளக்கப்படங்கள், பென்சில் ஷார்ப்பனர்கள், அனைத்து வகையான பென்சில்கள் (கிரேயான்கள், பேஸ்டல்கள், டெய்லர் சாக்பீஸ் மற்றும் வரைதல் கரியன்கள் உட்பட), அத்துடன் பயிற்சிக் குறிப்பேடுகள், வரைபடக் குறிப்பேடுகள் மற்றும் ஆய்வகக் குறிப்பேடுகள் ஆகியவற்றுக்கு முன்பு 12% வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+