தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் பெரிய தங்க நகைக்கடைகள் பல ஊர்களில் கிளைகளை தொடங்கியது எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய தங்க நகைக்கடைகள் பல ஊர்களில் கிளைகளை தொடங்கியது எப்படி சாத்தியமானது என்று எண்ணியதுண்டா, மிக குறுகிய காலத்தில் ஏராளமான தங்க நகைக்கடைகள் ஒவ்வொரு ஊரிலும் பெரிய தங்க நகைக்கடை நிறுவனங்களால் எப்படி செய்ய முடிந்தது என்று யோசித்து பார்த்துள்ளீர்களா.. பல வருடங்களாக அதிக கிளைகளை கொண்டுவர முடியாத பெரிய நிறுவனங்கள், இப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் வளர. மத்திய அரசு கொண்டுவந்த ஒரு விதி தான் காரணம் பெரிய நகைக்கடைகள் ஜெயிக்க காரணமாக அமைந்தது. அது பற்றி பார்ப்போம்.
ஒரு 10 வருடங்களுக்கு முன்பு பெரிய நகைக்கடைகள் எல்லாம், எல்லா ஊரிலும் இருக்காது. மதுரையில் பாரம்பரிய நகைக்கடைகள் மதுரையில் தான் இருக்கும். சென்னையின் பெரு நகைக்கடைகள் எல்லாம் சென்னையில் தான் இருக்கும். அதிலும் ஒரு சில கிளைகள் தான் வைத்திருக்கும். நகைக்கடைகள் மற்றும் ஜவுளி கடைகளுக்கும் இந்தவிதி பொருந்தும்.

10 ஆண்டுகளில் பெரிய மாற்றம்
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பெரிய தங்க நகைக்கடைகள் பல ஊர்களில் கிளைகளைத் தொடங்க முடிந்துள்ளது. தங்கள் கிளைகளின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்க எப்படி முடிந்தது.. ஒரு ஊரில் கடை திறக்கவே பல கோடி தேவைப்படும் என்கிற நிலையில், ஒவ்வொரு ஊரிலும் பல கோடி முதலீடு எப்படி செய்தார்கள். எப்படி பெரிய நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது என்றால், அதற்கு காரணங்கள் உள்ளன. அவற்றை பார்ப்போம்.
தங்க நகை சந்தையில் மாற்றம்
மிக முக்கியமான காரணம், தங்க நகை சந்தை 'ஒழுங்கமைக்கப்பட்ட துறை' நோக்கி நகர்ந்ததுதான், இப்படி அதிக கிளைகளுடன் வேகமான விரிவாக்கத்தின் மையப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. அதாவது பாரம்பரியமாக நகைக்கடைகள் உள்ளூர் நகைக்கடை விற்பனையாளர்களைச் சார்ந்து இருந்தன. அதாவது பெரிய நகைக்கடைகளின் வணிகம் என்பது உள்ளூர்களில் உள்ள சிறிய நகைக்கடைகளை சார்ந்து இருந்தன. இந்த பெரிய நகைக்கடைகள் தங்கத்தில் மிக தூய்மை , செய் கூலி , எக்ஸ்சேஞ் ரேட், சேதாரம் போன்றவற்றில் அதிக வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் வழங்கின. இதனால் பலரும் சிறிய கடைகளுக்கு பதில் பெரிய கடைகளில் நகைகளை வாங்க ஆர்வம் காட்டினார்கள்.
ஹால்மார்க் விதி
அது மட்டுமின்றி மத்திய அரசு கட்டாய ஹால்மார்க்கிங் விதியை அமல்படுத்தியது. தரத்தில் சமரசம் செய்யாத பெரிய தங்க நகைக்கடைகளின் நம்பகத்தன்மை மேலும் அதிகரித்தது. இதுவே பெரிய நகைக்கடைகள் விரிவாக வளர முக்கிய காரணமாக மாறியது. அடுத்ததாக ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற சீர்திருத்தங்கள், முறைப்படுத்தப்பட்ட வணிக நடைமுறைகளைக் கடைப்பிடித்த பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாக மாறியது.
வங்கிகள் தந்த கடன்
முறைப்படுத்தப்பட்ட வணிக நடைமுறைகளைக் கடைப்பிடித்தது தான், பெரிய நிறுவனங்கள், ஒரே ஊரில் இருக்காமல் ஊர் ஊராக கடையை திறக்க காரணமாக அமைந்தது. அவர்களின் வெளிப்படையான வணிக முறைகள் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து குறைந்த வட்டி விகிதத்தில் மூலதனம் பெற முடிந்தது. இந்த மூலதனத்தைக் கொண்டு அவர்கள் புதிய இடங்களில் ஒரே நேரத்தில் பல கிளைகளைத் திறக்க தொடங்கினார்கள்.
வருமானம் உயர்வு
அதேபோல் சில பெரிய நகைக்கடை நிறுவனங்கள், படிப்படியாக வளர்ந்து பங்குச் சந்தையில் நுழைந்து, பெருமளவு பொதுமக்களின் முதலீட்டைத் திரட்ட தொடங்கின. இது கிளை விரிவாக்கத்திற்கான நிதியை மேலும் அதிகப்படுத்தியது. அடுத்தாக தங்க நகை வாங்குவோரின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தின் வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் அதிகரித்தது. இது தங்க நகைகளுக்கான ஒட்டுமொத்த தேவையை உயர்த்திவிட்டது. பலரும் தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கத்தின் தேவை அதிகரிப்பு மற்றும் விலை அதிகரிப்பு ஏற்பட்டு, பெரிய நிறுவனங்களுக்கு லாபத்தை பல மடங்கு அதிகரித்தது.இதனால் அவர்கள் பல கிளைகளை அவர்கள் திறக்க தொடங்கினார்கள்.
2 கே கிட்ஸ்கள் காரணம்
அதேபோல் 2 கே கிட்ஸ்கள், திருமண நகைகளுடன் மட்டுமல்லாமல், நவீன, அன்றாடப் பயன்பாட்டிற்கான நகைகள் மீதும் ஆர்வம் காட்டத் தொடங்கினர். இந்தத் தேவையை ஒரே மாதிரியான வடிவமைப்புகள் மற்றும் சேவை மூலம் அதிகப்படியான நகைக்கடைகளின் கிளைகள் திறப்பு இன்னொரு காரணமாக மாறியது. அதேபோல் குளிரூட்டப்பட்ட, பெரிய, விசாலமான ஷோரூம்கள் மற்றும் ஒரே மாதிரியான விற்பனைச் சேவைகளை வாடிக்கையாளர்கள் விரும்பத் தொடங்கியதும். இந்த மாற்றங்களுக்கு காரணம் ஆனது.
ஒரே மாதிரியான வடிவமைப்பு
பல கிளைகள் கொண்ட தங்க நகைக் கடைகள் நகைகளை மொத்தமாகத் தயாரித்து, அனைத்துக் கிளைகளுக்கும் ஒரே மையப்படுத்தப்பட்ட சப்ளை செயின் மூலம் அனுப்பின. இது உற்பத்தி செலவைக் குறைத்தது மற்றும் அனைத்துக் கிளைகளிலும் ஒரே மாதிரியான வடிவமைப்புகள் இருப்பதை உறுதி செய்திருக்கிறது.
விளம்பரம்
அதேபோல் தேசிய அளவிலான விளம்பரங்கள் மற்றும் பிராண்டிங் மூலம், ஒரு நிறுவனத்தின் பெயர் அனைத்துக் கிளைகளுக்கும் சென்றடைந்துவிட்டது. இதனால் புதிய ஊரில் கடையைத் திறந்தாலும், வாடிக்கையாளர்களின் அங்கீகாரம் எளிதாகக் கிடைத்துவிட்டது. இறுதியாக சொல்வது என்றால், அதிகமான தங்கதத்தின் தேவை, மக்களின் நிலையில்ஏற்பட்ட மாற்றம். மத்திய அரசின் சீர்திருத்தங்கள் மூலம் நிறுவனமயமாக்கல், மற்றும் தாராளமாகக் கிடைத்த நிதி ஆகியவையே கடந்த சில வருடங்களில் நகைக்கடைகள் பல ஊர்களில் கிளைகளைத் திறந்ததற்குக் காரணமாக அமைந்துள்ளது.
-
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
கயிறு அவிழப்போகுது.. தங்கத்தின் 'திக் திக்' நிமிடங்கள்.. ஸ்விஸ் வங்கி விடுக்கும் பயங்கர வார்னிங்! -
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications