இஸ்ரேல் - ஈரான் மோதலால்.. இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? நிபுணர்கள் சொல்வது என்ன
வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போர் பதற்றம் இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இந்தியாவில் எண்ணைய் விலை உயரும் அபாயம் உள்ளதா? என்பது பற்றி பார்க்கலாம்.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்கள் சர்வதேச அளவில் எரிசக்தி சந்தைகளை உலுக்கியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டு இருக்க கூடிய மோதலால், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இருந்து விநியோகம் தடைபடும் என்ற கவலை அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
பெஞ்ச்மார்க் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 6 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, அதாவது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவாக அதிகபட்சமாக 78 டாலரை எட்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது அதிக எரிபொருள் செலவுகளை ஏற்படுத்தும். இதனால், சரக்கு கட்டணம் உயரும். அபாயம் ஏற்படும்.
உலகளாவிய பதட்டங்கள் அதிகரிப்பதால் உடனடி பாதிப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வாலட்டைலிட்டி குறியீட்டெண் எனப்படும் VIX, வெள்ளிக்கிழமை அன்று சுமார் 8% உயர்ந்தது. எரிசக்தி சந்தை குறித்த S&P குளோபல் கமாடிட்டிஸ் இன்சைட்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் இது குறித்து கூறுகையில், "இந்த தாக்குதல் குறுகிய காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வை ஏற்படுத்தும் என்றாலும், எண்ணெய் ஏற்றுமதியை நேரடியாக பாதிக்கும் வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
80 சதவீதம் உயர்வு
S&P குளோபல் கமாடிட்டிஸ் இன்சைட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ரிச்சர்ட் ஜோஸ்விக் கூறுகையில், "இந்த தாக்குதல் கச்சா எண்ணய் விலை உயர்வை உடனடியாக அந்த நேரத்தில் மட்டும் ஏற்படுத்தலாம். ஈரான் மற்றும் இஸ்ரேல் கடந்த முறை மோதிக்கொண்ட போது, முதலில் விலை உயர்ந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிந்ததும் உடனடியாக வீழ்ச்சியை சந்தித்தன.
ஈரானிடமிருந்து இந்தியா நேரடியாக அதிக அளவு எண்ணெயை இறக்குமதி செய்யவில்லை. எனினும், தனது எண்ணெய் தேவையில் சுமார் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. ஈரானுக்கு வடக்கே மற்றும் அரேபிய தீபகற்பத்திற்கு தெற்கே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்த ஏற்றுமதி நடைபெறுகிறது. சொல்லப்போனால், உலகளாவிய LNG வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கணிசமான பகுதி இந்த குறுகிய நீர்வழிப் பாதையின் வழியாக செல்கிறது.
இந்தியாவில் பாதிப்பு
எனவே, ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் எண்ணெய் ஏற்றுமதியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நாடுகள் இந்தியாவின் முக்கிய சப்ளையர்களாக உள்ளனர். மேலும், இந்த பாதையில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் இந்தியாவின் ஏற்றுமதியை நேரம் மற்றும் செலவு அடிப்படையில் பாதிக்கலாம்.
சமாளிக்க முடியுமா?
கடந்த காலங்களில், ஈரான் இந்த முக்கிய பாதையை தடுப்பதாக எச்சரித்து இருக்கிறது. எனவே, இவ்வாறு தடுத்தால் இந்தியாவுக்கான சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படலாம். OPEC+ எனப்படும் கச்சா எண்னய் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகள், ஜூலை மாதம் எதிர்பார்த்ததை விட அதிகமான உற்பத்தியை அறிவித்திருப்பதால், மேலும் ஈரான் சப்ளையை குறைத்தால் அதை சமாளிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications