அள்ளி தரும் தங்கம்.. 5 வருடத்தில் லாபத்தை அள்ளி இருக்கலாம்! அப்போ 10 ஆண்டுகளில் எவ்வளவு லாபம்?
மும்பை: நமது நாட்டில் தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் இதுவரை இல்லாத அளவுக்குத் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விற்பனை கூட குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தளவுக்குத் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், ஒருவர் 3, 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் எந்தளவுக்கு லாபம் கிடைத்திருக்கும் என நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் மக்கள் எப்போதும் விரும்பி முதலீடு செய்யும் விஷயமாகத் தங்கம் இருக்கிறது. கடந்த சில காலமாகவே ராக்கெட்டை போலவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தங்கம்:
இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7945க்கு விற்பனையாகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8667க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இனிமேல் தங்கத்தை வாங்கினால் நமக்கு லாபம் கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் வந்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த காலங்களில் நாம் தங்கத்தை வாங்கியிருந்தால் எந்தளவுக்கு லாபம் கிடைத்திருக்கும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
3 ஆண்டுகளுக்கு முன்பு:
முதலில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கலாம். 24 கேரட் தங்கத்தின் விலை கடந்த 2022ம் ஆண்டு Rs.5,267ஆக இருந்தது. அதாவது 24 கேரட் தங்கம் 10 கிராம் அப்போது ரூ.52,670 ஆக இருந்தது. அதே 24 கேரட் தங்கம் 10 கிராம் இப்போது 86,670 ரூபாயாக இருக்கிறது. அதாவது 3 ஆண்டுகளுக்கு முன்பு 10 கிராம் வாங்கியவர்களுக்கு ரூ.34 ஆயிரம் லாபம் கிடைத்திருக்கும். அதாவது ஆண்டுக்கு சுமாராக 21% ரிட்டர்ன்.
5 ஆண்டுகளுக்கு முன்பு:
அடுத்து 5 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிட்டதட்ட கொரோனாவுக்கு முன்பு ஒருவர் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு லாபம் என்பதை நாம் பார்க்கலாம். 2019 காலகட்டத்தில் 24 கேரட் தங்கத்தின் விலை Rs.3,522ஆக இருந்தது. அதாவது 24 கேரட் தங்கம் 10 கிராம் அப்போது ரூ.35,220 ஆக இருந்தது. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு 10 கிராம் வாங்கியவருக்கு ரூ.51,450 லாபம் கிடைத்திருக்கும். அதாவது ஆண்டுக்கு கிட்டதட்ட 29% ரிட்டர்ன்.
10 ஆண்டுகளுக்கு முன்பு:
அதேநேரம் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014ல் தங்கம் வங்கியிருந்தால் அவர் 24 கேரட் தங்கம் ஒரு கிராமிற்கு Rs.2,800 தர வேண்டி இருக்கும். அதாவது 24 கேரட் தங்கம் 10 கிராம் அப்போது ரூ.28,000 ஆக இருந்தது. அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் வாங்கியவருக்கு ரூ.58,670 லாபம் கிடைத்திருக்கும். அதாவது ஆண்டுக்கு கிட்டதட்ட 20% ரிட்டர்ன் கிடைத்திருக்கும்..
தங்கம் விலை உயர்வது ஏன்:
தங்கம் என்பது எப்போதும் ஆபத்தான காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் விரும்பும் விஷயமாகவே இருந்துள்ளது. கொரோனா சமயத்தில் நிச்சயமற்ற ஒரு சூழல் இருந்த நிலையில், தங்கம் விலை அதன் பிறகே ஜெட் வேகத்தில் ஏற தொடங்கியுள்ளது. இப்போது என்ன தான் கொரோனா இல்லை என்றாலும் டிரம்பின் அரசியல், உலகெங்கும் நடந்து வரும் போர் சூழல்களால் தங்கம் விலை அதிகரிக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications