இனி வட்டி குறைப்பிற்கு வாய்ப்பே இல்லை.. "தாராளம்" டூ "நடுநிலை".! ரிசர்வ் வங்கியின் நோக்கம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் 0.50% வட்டி குறைக்கப்படுவதாக ஆர்பிஐ அறிவித்தது. இது மிகவும் முக்கியமான ஒரு அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆர்பிஐ-இன் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் விளக்கியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 3 நாள் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதி நாளான இன்று வட்டி விகிதம் 0.50% குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 5.5%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பலரும் ஆர்பிஐ 0.25% மட்டுமே குறைக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒரேயடியாக 0.50% குறைத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.

RBI economy

வட்டி குறைப்பு

இதன் மூலம் ஹோம் லோன், வீட்டுக் கடன் ஆகியவற்றுக்கு நாம் செலுத்தும் தொகை கணிசமாகக் குறையும். பல்வேறு காரணங்களால் பொருளாதார வளர்ச்சி குறையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை ஊக்குவிக்கவே ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே ஆர்பிஐ-இன் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் விளக்கியுள்ளார்.

இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ராஜேஷ் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "வீட்டுக்கடன் வட்டி குறையப் போகுதுங்கோ.. இந்திய ரிசர்வ் வங்கி (RBI)யின் வட்டிக் குறைப்பு அறிவிப்பு இன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது!

ரெப்போ விகிதம் குறைப்பு:

RBI, வங்கிகளுக்குக் கடன் கொடுக்கும் வட்டி விகிதத்தை (ரெப்போ விகிதம்) 0.5% குறைத்து 5.5% ஆக மாற்றியது. இதனால், வங்கிகள் இனி குறைந்த வட்டியில் RBI-யிடம் கடன் வாங்கலாம். பலரும் 0.25% குறைப்பு எதிர்பார்த்த நிலையில், RBI இன்னும் பெரிய குறைப்பை அறிவித்தது.

பண இருப்பு விகிதம் (CRR) குறைப்பு:

RBI, வங்கிகள் தங்களிடம் உள்ள பணத்தின் ஒரு பகுதியை RBI-யிடம் வைத்திருக்க வேண்டிய விகிதத்தையும் (CRR) குறைத்தது. இதனால், வங்கிகளிடம் கூடுதலாக 2.5 லட்சம் கோடி ரூபாய் இருக்கும். இந்த பணத்தை வங்கிகள் மக்களுக்குக் கடனாகக் கொடுக்க முடியும்.

இதனால் என்ன நடக்கும்?

கடன்கள் மலிவாகும்: வீட்டுக் கடன், கார் கடன், தொழில் கடன் போன்றவற்றின் வட்டி குறையும். இதனால், மாதாந்திர தவணைகள் (EMI) குறைய வாய்ப்பு உள்ளது.

கார் மற்றும் வீடு விற்பனை அதிகரிக்கும்: வட்டி குறைவதால், மக்கள் அதிகமாக கார் மற்றும் வீடு வாங்குவார்கள். இதனால், இந்த துறைகளின் பங்குகள் (ஆட்டோ, ரியல் எஸ்டேட்) உயர்ந்தன.

வங்கிகளின் லாபம் பாதிக்கப்படலாம்: வட்டி வருமானம் குறைவதால், வங்கிகளின் பங்குகள் சற்று சிரமப்படலாம்.

RBI-யின் புதிய அணுகுமுறை: RBI தனது கொள்கையை "தாராளமான" நிலையில் இருந்து "நடுநிலை" ஆக மாற்றியது. இதனால், பொருளாதாரத்துக்கு மிகவும் தேவைப்படாவிட்டால், மேற்கொண்டு வட்டி குறைப்பு இருக்க வாய்ப்பில்லை.

ஆர்பிஐ-இன் நோக்கம்:

RBI, பொருளாதார வளர்ச்சிக்கு உதவ விரும்புகிறது. அதே நேரம், பணவீக்கம் (விலைவாசி உயர்வு) அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புகிறது. இது ஒரு கவனமான சமநிலைப்படுத்தல். இந்த மாற்றங்கள் மக்களுக்குக் கடன் வாங்குவதை எளிதாக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்!" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+