Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவை விட்டு பிரேசில், தென்கொரியா சென்ற ₹1.55 லட்சம் கோடி .. 2025ல் நடந்த மிகப்பெரிய இழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியப் பங்குகள் விலை அதிகமாக இருப்பதாலும், டாலர் மதிப்பு உயர்வினாலும் இதுவரை இல்லாத அளவாக ₹1.55 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளன. இந்திய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போதைய பலமாக பார்க்கப்படுகிறது. நமக்கு அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளர், அந்நிய நாட்டு இலாகா முதலீட்டாளர்கள் மிக முக்கியம். ஆனால் நிலைமை சரியாக இல்லை என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.. அதனால் தென் கொரியா, பிரேசில் பக்கம் முதலீடுகள் செல்கிறது என்று பங்குச்சந்தை நிபுணர் ஹரி என்பவர் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். எதார்த்தம் என்ன.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இந்தியப் பங்குச்சந்தை ரூபாய் மதிப்பில் இரட்டை இலக்க லாபத்தைத் தந்திருந்தாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த லாபம் மற்ற நாடுகளை விடக் குறைவாகவே 2025ம் ஆண்டில் வந்துள்ளது. அதனால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி உள்ளனர். இதுவரை இல்லாத அளவாக 1.55 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறி உள்ளன. அந்த முதலீடுகள் தென் கெரியா, பிரேசில் போன்ற நல்ல லாபம் தரும் நாடுகளுக்கு போய்விட்டது என்று ப்ளூம்பெர்க் தரவுகளின் அடிப்படையில் பிசினஸ்லைன் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த செய்தியின் விவரங்களை சுருக்கமாக பார்ப்போம்.

In 2025 the depreciation of the Indian rupee will result in significant losses for FPIs

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த லாபம் மற்ற நாடுகளை விடக் குறைந்துள்ளால் என்ன சிக்கல் வந்தது..

ரூபாய் vs டாலர்: 2025-ல் இதுவரை நிஃப்டி 50 குறியீடு இந்திய ரூபாய் மதிப்பில் 10.47% உயர்ந்திருக்கிறது. ஆனால், டாலர் மதிப்பில் கணக்கிடும்போது இந்த வருமானம் வெறும் 5.44% ஆகக் குறைகிறது. இது உலக அளவில் உள்ள முக்கிய சந்தைகளில் மிகக் குறைவான வருமானம் ஆகும். இதற்கு முக்கிய காரணம், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 5.5% க்கும் அதிகமாகச் சரிந்ததுதான் காரணம் என்கின்றன தரவுகள்.

மற்ற நாடுகளுடன் ஒப்பீடு :

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்த அதேநேரம், ற்ற நாடுகள் டாலர் மதிப்பில் அதிக வருமானத்தைத் தந்துள்ளன. உதாரணமாக: தென் கொரியா சுமார் 71% வருமானத்தைத் தந்துள்ளது. பிரேசில், ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் டாலர் மதிப்பில் இந்தியாவை விட மிகச் சிறந்த வருமானத்தைப் பதிவு செய்திருக்கின்றன

வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள்:

எனவே இந்திய பங்குச்சந்தையில் நிலவிய குறைவான வருமானம் மற்றும் அதிக சந்தை மதிப்பீடு காரணமாக, 2025-ல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து பெருமளவு பணத்தை வெளியே எடுத்துவிட்டனர். டிசம்பர் 22-ஆம் தேதி நிலவரப்படி, சுமார் ₹1.55 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி இந்தியப் பங்குச்சந்தையை விட்டு வெளியேறி உள்ளதாக ப்ளூம்பெர்க் தரவுகளின் அடிப்படையில் பிசினஸ்லைன் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் 1.55 லட்சம் கோடி வெளியேறி இருப்பது அசாதாரணமான ஒன்றாக கருதப்படுகிறது.

டிரம்ப் போட்ட 50 சதவீத வரி காரணம்

அதேநேரம் அப்படியே வெளியேறிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிற்குப் பதில் கொரியா மற்றும் பிரேசில் போன்ற மலிவான சந்தைகளைத் தேர்ந்தெடுக்கிறார்களாம். இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா இந்தியாவிற்கு விதித்த 50 சதவீத வரி தான். அமெரிக்கா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியப் பொருட்கள் மீது 50% பரஸ்பர வரி விதித்தது உள்நாட்டு உற்பத்தியை மட்டும் பாதிக்கவில்லை.. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறவும் காரணமாக அமைந்துள்ளதாம்.

எதிர்காலம் எப்படி இருக்கும்?

எனினும், இந்திய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 2025-ல் அதிக முதலீடு செய்துள்ளதால், வெளிநாட்டு முதலீடுகளைச் சார்ந்திருப்பது குறைந்துள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தை சவால்களைச் சமாளிக்கும் வலிமையைப் பெற்றுள்ளது. தற்போது இந்தியாவின் சந்தை கட்டமைப்பு முன்னெப்போதையும் விட இப்போது வலுவாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் பங்குச்சந்தை உயர்ந்தாலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் இந்தியாவிலிருந்து தங்கள் முதலீடுகளை வெளியேற்றி வருகிறார்கள் என்பதுதான் பங்கு சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

In 2025 the depreciation of the Indian rupee will result in significant losses for FPIs


பங்கு சந்தை நிபுணர் கருத்து

இதுபற்றி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பங்கு சந்தை நிபுணர் ஹரி என்பவர், "இந்தியப் பங்குகள் விலை அதிகமாக இருப்பதாலும், டாலர் மதிப்பு உயர்வினாலும் இதுவரை இல்லாத அளவாக ₹1.55 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளன. இந்திய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போதைய பலமாக பார்க்கப்படுகிறது. நமக்கு அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளர், அந்நிய நாட்டு இலாகா முதலீட்டாளர்கள் மிக முக்கியம். ஆனால் நிலமை சரியாக இல்லை என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.. அதனால் தென் கொரியா, பிரேசில் பக்கம் முதலீடுகள் செல்கிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+