தொழில் நிறுவனங்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அக்.15 வரை கால அவகாசம்
வருமானவரி தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என்றிருந்த நிலையில், அக்டோபர் 15 வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: வருமானவரி தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் 15 நாட்கள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
2017-18 நிதியாண்டிற்கான தனிநபர் மற்றும் மாத ஊதியம் பெறுவோரின் வருமான வரிக் கணக்கை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர் காலவரையறை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தொழில்நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் 15 நாட்கள் அதாவது அக்டோபர் 15 வரை காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில் துறையினரும் ஜூலை மாதத்திற்கான கொள்முதல், விற்பனை மற்றம் நிகர வரிகளை செலுத்தவேண்டிய ஜிஎஸ்டிஆர்-3பி என்னும் படிவத்தை தாக்கல் செய்வதற்கான நெருக்கடியில் உள்ளனர்.
தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
2016-17ஆம் ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடு தேதியை வரும் செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து வரும் அக்டோபர் 31 வரை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில் துறையினரும் ஜூலை மாதத்திற்கான கொள்முதல், விற்பனை மற்றம் நிகர வரிகளை செலுத்தவேண்டிய ஜிஎஸ்டிஆர்-3பி என்னும் படிவத்தை தாக்கல் செய்வதற்கான நெருக்கடியில் உள்ளனர். அனைத்து தொழில் நிறுவனங்களும், வரி ஆலோசகர்களும் தணிக்கையாளர்களும் ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி என்று அலைந்து கொண்டிருப்பதால், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கின்றனர்.
இந்தநிலையில், 2017-18 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி முடிவடைவதாக இருந்த கடைசி தேதி, அக்டோபர் 15ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு ஏற்கனவே கூறியபடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications