இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் ஒரு நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை புரிந்துகொள்ள சாதாரண குடும்பத்தின் பண நிர்வாகத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த எளிய உதாரணம் நீங்கள் அதிக பணத்தை சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கற்றுக்கொடுக்கும்.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் பணக்காரராக மாற விரும்பினால் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று செலவுகளைக் குறைப்பது, மற்றொன்று வருமானத்தை அதிகரிப்பது. தற்போது இந்தியா முதல் வழியைப் பின்பற்றுவதாகவும், அமெரிக்கா இரண்டாவது வழியைப் பின்பற்றுவதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

செலவைக் குறைப்பதன் மூலம் நிலைத்தன்மை
ஒரு குடும்பத்தில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டால், வெளியில் சாப்பிடுவதை நிறுத்தி, தேவையற்ற பொருட்களை வாங்காமல், பயணங்களைக் குறைத்து, ஒவ்வொரு ரூபாயையும் சேமிப்பது இயல்பான முடிவாகும். இது பண இழப்பைத் தடுக்கும். ஆனால் இந்த வழியில் பெரிய செல்வத்தை உருவாக்க முடியாது. அதாவது பணக்காரராக மாற முடியாது.
இதேபோல், இந்தியா தற்போது டாலர் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களை குறைப்பது, தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது, வெளிநாட்டு பயணங்களைக் குறைக்குமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்துவது, தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது மூலம் பொருளாதாரத்தையும், ரூபாய் மதிப்பையும் காத்து வருகிறது. இந்த அணுகுமுறை பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்க உதவுகிறது. ஆனால் இந்த நடவடிக்கை நாட்டின் வேகமான வளர்ச்சியை தடுக்கலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.
வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி
மறுபுறம், ஒரு குடும்பம் உறுப்பினர்கள் புதிய திறன்களைக் கற்று கொண்டு, தொழில் தொடங்கி, புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்து, கணக்கிட்ட ஆபத்துகளை ஏற்றுக்கொண்டால் அதிக வருமானம் ஈட்ட முடியும். இந்த வழி சற்று ஆபத்தானது என்றாலும், உண்மையான செல்வத்தை உருவாக்க பெரிய அளவில் உதவும்.
அமெரிக்கா தற்போது இந்த இரண்டாவது வழியைப் பின்பற்றுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அதிக முதலீடு, வட்டி விகிதங்களைக் குறைக்கும் எதிர்பார்ப்பு, பெரிய அளவிலான நிதி முதலீடுகள், உலகளாவிய வணிக கூட்டணிகள் ஆகியவற்றை ஊக்குவித்து வருகிறது. இந்த அணுகுமுறை வேகமான பொருளாதார வளர்ச்சியை கொடுத்தாலும், சில நேரங்களில் பெரிய ஆபத்துகளையும் கொண்டிருக்கும்.
முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்
பொதுவாக முதலீட்டு சந்தைகளில் எச்சரிக்கையான அணுகுமுறையை விட, வளர்ச்சியை அதிகம் தேடும் அணுகுமுறை தான் அதிகளவில் லாபத்தை அளிக்கின்றன. முதலீட்டாளர்கள் ஒரு நாடு பாதுகாப்பு முறையில் (defensive mode) இருக்கிறதா அல்லது வளர்ச்சி முறையில் (expansion mode) இருக்கிறதா என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியா தற்போது பொருளாதாரத்தை பாதுகாக்கும் நிலையில் உள்ளது. அமெரிக்கா எதிர்கால வளர்ச்சிக்காக துணிச்சலான முடிவுகளை எடுத்து வருகிறது. எனவே, புத்திசாலி முதலீட்டாளர், எப்போது பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும், எப்போது வளர்ச்சிக்கான முதலீட்டில் ஈடுபட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
செலவைக் குறைப்பது செல்வத்தை பாதுகாக்கும். ஆனால் அதிகளவிலான வருமானத்தை அளிக்காது. இந்த எளிய ஒப்பீடு எங்கு அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்பது தெரிந்துக்கொள்ள முடியும்.
-
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
தங்கம் விலை இனியும் சரியும்.. விடாமல் விலை குறையும்.. ஆனால் அதற்கு பின்புதான் ட்விஸ்ட் இருக்கு! -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.!












Click it and Unblock the Notifications