62 வயது.. ஸ்கிராச்சில் இருந்து துவங்கும் ஜெப் பெசோஸ்.. அதென்னப்பா Prometheus!
உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை நிறுவனமான அமேசானின் (Amazon) நிறுவனரான ஜெஃப் பெசோஸ், கடந்த 2021 ஆம் ஆண்டு தனது தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியிலிருந்து விலகிய பிறகு, வர்த்தக உலகமே வியக்கும் வகையில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை ரகசியமாகத் ஸ்கிராச்சில் இருந்து தொடங்கியுள்ளார்.
'ப்ரோமிதியஸ்' (Prometheus) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனம், பல மாதங்களாக ரகசியமாக செய்து வந்த பணியை தற்போது அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்துள்ளது. இதோடு மிகப்பெரிய முதலீட்டையும் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆர்டிபிஷியல் ஜெனரல் இன்ஜினியர்
சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற தற்போதைய ஏஐ தொழில்நுட்பங்கள் இணையத்தில் உள்ள எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மட்டுமே கற்றுக்கொண்டு வேலை செய்கின்றன. ஆனால், ஜெஃப் பெசோஸின் ப்ரோமிதியஸ் நிறுவனம் Physical World தரவுகளையும் உள்வாங்கி, உற்பத்தி மற்றும் இன்ஜினியரிங் (Engineering and Manufacturing) துறைகளில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தக் களமிறங்கியுள்ளது.
இதனை 'ஆர்டிபிஷியல் ஜெனரல் இன்ஜினியர்' (Artificial General Engineer) என்று ஜெஃப் பெசோஸ் அழைக்கிறார். வானளாவிய கட்டிடங்கள், அதிநவீன ஸ்மார்ட்போன்கள், ஜெட் விமானங்கள் மற்றும் அனைத்து விதமான உற்பத்திப் பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வேகத்தை இந்த ஏஐ தொழில்நுட்பம் பன்மடங்கு வேகப்படுத்த உள்ளது.
இந்தியர் தான் தலைமை
இதற்காக கூகுள் எக்ஸ் (Google X) நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான விக் பஜாஜ் (Vik Bajaj) உடன் இணைந்து ஜெஃப் பெசோஸ் இந்நிறுவனத்தை நேரடியாக வழிநடத்தி வருகிறார். இதோடு இந்நிறுவனத்தின் சிஇஓ-வாகவும் விளங்குகிறார்.
வேலைவாய்ப்பு
இன்ஜினியரிங் துறையில் பெரும்பாலான வேலைகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் தானியங்கி மயமாக்கும் (Automate) என்பதால், உலகளவில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால், இந்த கணிப்பை ஜெஃப் பெசோஸ் முற்றிலும் மறுக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், "தற்போது 100 பொறியாளர்கள் சேர்ந்து 10 ஆண்டுகள் உழைத்துக் கட்டும் ஒரு மெகா உள்கட்டமைப்பை, இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெறும் 10 பொறியாளர்களைக் கொண்டு ஒரே ஆண்டில் கட்டி முடிக்க முடியும். இதனால் உற்பத்தித் திறன் பன்மடங்கு அதிகரித்து, மனித உழைப்பிற்கான தேவை குறைக்கப்படும்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனை அவர் 'தொழிலாளர் பற்றாக்குறைக்கான தீர்வு' (Labor Scarcity solution) என்று அழைக்கிறார். அதாவது, வேலைவாய்ப்புகள் அழியாது, மாறாக ஏஐ தொழில்நுட்பத்தை இயக்கத் தெரிந்த திறமையான மனிதர்களுக்கான தேவைதான் சந்தையில் பன்மடங்கு எகிறும் என்பது பெசோஸின் கணிப்பாகும்.
150 ஊழியர்கள்
ப்ரோமிதியஸ் நிறுவனம் தற்போது சான் பிரான்சிஸ்கோ, லண்டன் மற்றும் சூரிச் ஆகிய சர்வதேச நகரங்களில் உள்ள தனது அலுவலகங்களில் வெறும் 150 ஊழியர்களை மட்டுமே கொண்டு மிக ரகசியமாக இயங்கி வருகிறது. தாங்கள் இதுவரை உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் துல்லியமான விபரங்களை இந்நிறுவனம் தற்போதைக்கு மிகவும் ரகசியமாகவே வைத்துள்ளது.
41 பில்லியன் டாலர்
Prometheus நிறுவனம் சுமார் 41 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் உலக ஏஐ சந்தையில் இந்த நிறுவனம் ஒரு புதிய ஆரம்பத்தை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களை போல் டெக்ஸ், வாய்ஸ் கமெண்ட் மூலம் பணிகளை செய்வதை தாண்டி நிஜ உலகில் ஏஐ மூலம் மாற்றங்களை செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சிஎன்பிசி வெளியிட்டுள்ள தகவலின்படி, ப்ரோமிதியஸ் நிறுவனம் தனது இரண்டாவது சுற்று நிதித் திரட்டலில் (Fundraise) ஒரே நாளில் 12 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தனது முதற்கட்ட நிதியாக ஏற்கனவே 6.2 பில்லியன் டாலரைத் திரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெஃப் பெசோஸ் தனது சொந்தப் பணத்தை இதில் முதலீடு செய்துள்ளதோடு, உலகப் புகழ்பெற்ற நிதி நிறுவனங்களான ஜேபிமார்கன் (JPMorgan), பிளாக்ராக் (BlackRock), கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), டிஎஸ்டி குளோபல் மற்றும் ஆர்ச் வென்ச்சர் பார்ட்னர்ஸ் ஆகியவையும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications