ரொம்ப கம்மி.. "இந்த" மாநிலத்தில் தங்கம் வாங்கினால் நல்லா மிச்சம் பிடிக்கலாம்!.. தமிழகம் அருகே தான்!
சென்னை: தங்கம் விலை என்பது சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யும் விஷயம் என்றாலும் கூட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும். குறிப்பாக இந்தியாவிலேயே கூட எல்லா மாநிலங்களிலும் தங்கம் ஒரே ரேட்டில் விற்கப்படாது. நாட்டிலேயே எங்குத் தங்கம் விலை குறைவு.. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியர்களின் முதல் சேமிப்பாகத் தங்கம் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தங்கம் ஒரே விலையில் விற்கப்படுவதில்லை. மாநிலத்திற்கு மாநிலம் தங்கம் விலை கணிசமாக மாறுகிறது.

எங்கே குறைவு!
அதன்படி பார்க்கும்போது நமது அண்டை மாநிலமான கேரளாவில் பொதுவாகத் தங்கம் விலை குறைவானதாக இருக்கும். இந்தியாவில் குறைந்த விலையில் தங்கம் விற்கும் மாநிலங்களில் ஒன்றாகக் கேரளா இருக்கிறது. அதற்குச் சில முக்கிய காரணங்கள் இருக்கிறது. அதிகப் போட்டி, துறைமுகங்களுக்கு அருகே இருப்பது, சிறப்பு வரி அமைப்புகள் ஆகியவற்றால் தான் கேரளாவில் தங்கம் தங்க விலை குறைவாக உள்ளது.
காரணங்கள்
இந்தியாவில் விற்கப்படும் கிட்டத்தட்ட அனைத்துத் தங்கமும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் பெரும்பாலும் மிகப் பாதுகாப்பாகச் சரக்கு கப்பல்கள் மூலமாகவே இந்தியாவுக்கு வரும். அதன்படி தங்கம் அதிகம் இறக்குமதி செய்யும் துறைமுகங்களில் ஒன்றாக கொச்சி இருக்கிறது. அங்கிருந்து கேரளாவுக்குள் தங்கத்தை எடுத்துச் செல்லச் செலவு குறைவாகவே ஆகும். பாதுகாவலர்கள், கனரக வாகனம் எனத் தங்கத்தை எடுத்துச் செல்லச் செலவு அதிகம் பிடிக்கும். மற்ற மாநிலங்களுக்கு என்றால் தொலைவு அதிகம். செலவும் அதிகம். கேரளாவுக்குள் என்றால் செலவு குறைவு என்பதே இதன் லாஜிக்!
அதிகப் போட்டி
அடுத்து அதிகப் போட்டி.. கேரளாவில் மிக அதிகளவில் தங்க நகைக் கடைகள் உள்ளன. சுமார் 15 ஆயிரத்திற்குமே மேற்பட்ட நகைக்கடைகள் கேரளாவில் உள்ளன. கேரளாவைச் சேர்ந்த பல நகைக் கடை நிறுவனங்கள், மாநிலத்தைத் தாண்டி தங்கள் பிரண்ட்டை எடுத்துச் செல்ல முயல இதுவே காரணம். இந்தளவுக்குப் போட்டி அதிகமாக இருப்பதால் தான் ஜுவலர்கள் சற்று விலையைக் குறைத்துக் கொடுக்கவும் ரெடியாக இருக்கிறார்கள். இந்த போட்டியும் கூட ஒரு காரணம்.
இந்தியாவில் சுமார் 20% நகை வர்த்தகம் கேரளாவில் தான் நடக்கிறது. இதனால் தான் லாபம் ஓரளவுக்குக் குறைந்தாலும் கூட, மிக அதிக அளவில் நகை விற்பனையால் அதை ஈடு செய்துவிடலாம் என்பதால் லாபத்தைக் குறைத்து வாங்குகிறார்கள். அதாவது குறைந்த லாபம் என்றாலும் அதிகளவில் விற்பனையாவதால் அது ஈடாகிவிடும்.
எல்லாமே குறைவு
மேலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் செய்கூலி, சேதாரம் உட்பட விஏ சார்ஜ்கள் குறைவு. அங்கு டிசைன்களும் சிக்கலாக இல்லாமல் எளிமையாக இருக்கும் என்பதால் கிராமுக்கு ₹500-800 வரை மட்டுமே செய்கூலி, சேதாரம் வசூலிப்பார்கள்.
வெளிநாடுகளில் குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் கேரள மக்கள் தான் அதிகம் வேலை செய்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி வெளிநாடுகளில் வேலை செய்யும் கேரள மக்கள் நாடு திரும்பும்போது, டயூட்டி-ஃப்ரீயாக 20 கிராம் வரை எடுத்து வரலாம். இது குறைவு போலத் தோன்றினாலும் ஆயிரக் கணக்கானோர் வரும்போது இதுவே கணிசமான அளவாக அதிகரிக்கும்.
இந்த காரணங்கள் எல்லாம் சேர்வதால் தான் தங்க விலை தினசரி மாறுபடும் என்ற போதிலும் ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கேரளாவில் தங்கம் விலை சற்று குறைவாகவே இருக்கிறது!
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications