Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாற்றிலேயே முதல் முறையாக.. LIC மாபெரும் அறிவுப்பு.. 1:1 போனஸ்.. 22 லட்சம் பேர் கொண்டாட்டம்!

Subscribe to Oneindia Tamil

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) தனது வரலாற்றில் முதன் முறையாக 1:1 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 22 லட்சம் பங்குதாரர்களை LIC மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றதில் இந்த முக்கிய முடிவை எடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு பங்குதாரரும் தாங்கள் வைத்திருக்கும் ஒரு பங்குக்கு ஒரு புதிய பங்கை இலவசமாகப் பெற உள்ளனர். இந்தப் போனஸ் பங்குகள் முழுமையாக செலுத்தப்பட்ட ரூ.10 முக மதிப்புள்ள ஈக்விட்டி பங்குகளாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

LIC Bonus shares stock market LIC 1 1 Bonus Issue LIC Bonus Shares 2026 LIC First Bonus Issue LIC 22 Lakh Shareholders Bonus LIC Bonus Issue Benefits 1 1 2026 22 LIC 1 1 bonus issue LIC bonus shares 2026 LIC first bonus issue LIC 22 lakh shareholders bonus LIC bonus issue June 2026 LIC bonus issue record date how LIC bonus share works LIC Q3 profit 2026 LIC bonus issue benefits LIC share price after bonus LIC capitalising reserves LIC 1 1 bonus eligibility LIC bonus issue timeline LIC bonus vs dividend LIC stock news today 1 1 2026 22 2026 Q3 2026 1 1 vs

எல்ஐசி போனஸ் பங்குகள்

எல்ஐசி இந்த போனஸ் பங்குகளை வழங்குவதற்காக தனது இருப்பு மற்றும் உபரி நிதியில் இருந்து சுமார் ரூ.6,325 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. 2025 டிசம்பர் 31 வரை நிறுவனத்தின் இருப்புகள் சுமார் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்ததன் அடிப்படையில் தற்போது போனஸ் பங்குகளுக்கான முழுமையான நிதியை எல்ஐசி நிர்வாகம் ஏற்கிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட வேண்டும் என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

போனஸ் பங்குகள் எப்போது கிரெடிட் ஆகும்? பதிவு தேதி என்ன?

எல்ஐசி போனஸ் பங்குகளை இயக்குநர் குழு ஒப்புதல் அளித்த தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், அதாவது ஜூன் 12, 2026-க்குள் பங்குதாரர்களின் டீமேட் கணக்குகளில் கிரெடிட் செய்ய உறுதியளித்துள்ளது. பங்குகளைப் பெற தகுதியானவர்கள் பதிவு தேதியன்று (record date) நிறுவன பங்குகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே அளிக்கப்படும்.

மேலும் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது. இந்த செயல்முறையில் பங்குதாரர்கள் எந்தவிதமான விண்ணப்பமும் செய்யத் தேவையில்லை. பங்குகள் தானாகவே அவர்களின் கணக்குகளில் சேர்க்கப்படும்.

போனஸ் பங்கு என்றால் என்ன?

போனஸ் பங்கு என்பது நிறுவனம் தனது கைஇருப்பு நிதியைப் பயன்படுத்தி தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு இலவசமாக கூடுதல் பங்குகளை வழங்குவதாகும். இங்கு 1:1 விகிதத்தில் எல்ஐசி பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கு ஒரு பங்கு கூடுதலாக வழங்கப்படுகிறது.

எப்படி இது செயல்படுகிறது?

உதாரணமாக, ஒருவர் 100 பங்குகளை வைத்திருந்தால், போனஸ் மூலம் மற்றொரு 100 பங்குகள் இலவசமாகக் கிடைக்கும். இதனால் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கும். ஆனால் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிடலைசேஷன்) மாறாது. பங்கு விலை மட்டுமே குறையும்.

போனஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு எப்படி பயனளிக்கும்?

போனஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால செல்வ வளர்ச்சிக்கு உதவும் கருவியாக அமைகின்றன. இந்த போனஸ் பங்குக்கள் உடனடி பண வருமானம் தராவிட்டாலும், பங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சராசரி பங்கு விலை குறையும்.

உதாரணமாக, ரூ.2,000 விலையில் 100 பங்குகளை வாங்கியவர் 1:1 போனஸ் பெற்றால், மொத்தம் 200 பங்குகள் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு பங்கின் சராசரி விலை ரூ.1,000 ஆகக் குறையும் (முதலீட்டு மதிப்பில் எவ்விதமான மாற்றமும இல்லாமல் இதே 2,00,000 ரூபாயாக தான் இருக்கும்).

பங்கு விலை 2000 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக குறைவது மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குகளை வாங்குவதை எளிதாக்கும், அதிகரிக்கும். அதிக பங்குகள் இருப்பதால் வர்த்தக அளவு அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், போனஸ் இஷ்யூ என்பது நிறுவனத்தின் நிதி ஆரோக்கியத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பெரிய இருப்பு நிதி மற்றும் நல்ல லாப வரலாறு உள்ள நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட முடியும்.

எல்ஐசி Q3 முடிவுகள்

டிசம்பர் காலாண்டில் எல்ஐசி ஒருங்கிணைந்த நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ.12,930 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.11,008 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எல்ஐசி நிறுவனத்தின் நிகர ப்ரீமியம் வருமானமும் 17 சதவீதம் உயர்ந்து ரூ.1.26 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.1.07 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும். ஜனவரி-மார்ச் காலாண்டு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எல்ஐசி பங்கு

எல்ஐசி பங்குகள் இன்று 0.71 சதவீதம் உயர்ந்து 804.25 ரூபாய் அளவில் வர்த்தகமாகிறது. கடந்த ஒரு மாதத்தில் எல்ஐசி பங்குகள் சுமார் 5 சதவீதம் உயர்ந்துள்ளன. ஆனால் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 5 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. மூன்று ஆண்டுகள் நீண்ட காலத்தில் பங்கு விலை சுமார் 47 சதவீதம் உயர்ந்துள்ளது.

2022 மே மாதம் பங்குச் சந்தையில் அறிமுகமானதிலிருந்து எல்ஐசி 5 முறை இடைக்கால டிவிடெண்டுகளை அறிவித்துள்ளது. இப்போது போனஸ் இஷ்யூ மூலம் பங்குதாரர்களுக்கு மேலும் ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+