ஐடி ரிட்டர்ன் செய்ய ஆதார் கட்டாயம் - பான் கார்டுடன் இணைக்கவும் தீர்வு

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் உள்ள சிக்கலுக்கு ஒரு தீர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதார் இணையதளத்தில் சென்று, பெயரை மாற்ற கோரிக்கை அனுப்ப வேண்டும். அதற்கு ஆதாரமாக பான் கார்டின் ஸ்கேன் காப்பியை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்மூலம், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்

இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே ஜூலை 1ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியமாகிவிட்டது. மத்திய அரசு அறிவித்த பின்னர் 2கோடி பேர் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துள்ளதாக வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.

ஆதார் எண்

ஆதார் எண்

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதற்கான திருத்த‌ மசோதாவை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டது.

இணைப்பதில் சிக்கல்

இணைப்பதில் சிக்கல்

அதைத் தொடர்ந்து, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டனர். அப்போது, பெரும்பாலான மக்களால் இணைக்க முடியவில்லை.

பான்கார்டில் தந்தை பெயர்

பான்கார்டில் தந்தை பெயர்

பான் எண்ணில் தந்தையின் இனிஷியலும் அதை தொடர்ந்து பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒரு சிலர் தந்தையின் பெயரை முதலில் போட்டு பின்னர் தனது பெயரை போடுகின்றனர். தற்போது ஆதார் எண் பெற்றுள்ள பலரது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரும் சேர்ந்துள்ளது. அதே நேரத்தில் பான் கார்டில் தந்தையின் பெயரை சேர்த்தவர்கள் ஆதார் எண்ணில் தந்தையின் இன்ஷியலை மட்டுமே சேர்த்துள்ளனர். இந்த இரண்டையும் இணைக்கும்போது பெயர் வேறுபாடு இருப்பதாக அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விடுகிறது. இதனால், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் திணறினர்.

தீர்வு என்ன?

தீர்வு என்ன?

ஜூலை 1க்குள் இவற்றை இணைக்க முடியாவிட்டால் செல்லாமல் போகும் அபாயம் உள்ளது. சாப்ட்வேர் குழப்பத்துக்கு வருமான வரித்துறையினர் தீர்வு காணாவிட்டால் பல கோடி பான் எண்கள் ரத்தாகும் அபாயம் எழுந்துள்ளது. இதற்கு வருமான வரித்துறைதான் தீர்வளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இணைப்பது எப்படி?

இணைப்பது எப்படி?

இந்நிலையில், வருமான வரித்துறை இந்தச் சிக்கலுக்கான தீர்வை கண்டுபிடித்துள்ளது. அதன்படி, ஆதார் இணையதளத்தில் சென்று, பெயரை மாற்ற கோரிக்கை அனுப்ப வேண்டும். அதற்கு ஆதாரமாக பான் கார்டின் ஸ்கேன் காப்பியை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்மூலம், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

பெண்களுக்கு பாஸ்வேர்ட்

பெண்களுக்கு பாஸ்வேர்ட்

திருமணமான பெண்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்விதமாக, ஆதார் எண்ணுக்காக அவர்கள் பதிவுசெய்த செல்பேசி எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டு வருமான வரித்துறையால் அனுப்பப்படும். அந்த ஒன் டைம் பாஸ்வேர்டை பயன்படுத்தி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைத்து விட்டால் வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கையை அதிகரித்து விடலாம் என்று மத்திய அரசு எண்ணுகிறது. இதற்காக, பான் கார்டில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As per latest circular from income tax (I-T) department, it is now mandatory to provide Aadhaar and permanent account number (PAN) details while filing tax returns.
Please Wait while comments are loading...