37 வருடத்திற்கு முன்பு ரூ.300க்கு வாங்கிய ரிலையன்ஸ் பங்குகள்! இப்போது அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சண்டிகர்: சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் பத்திரத்தைக் கண்டுபிடித்த ஒருவர், அதை போட்டோவாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அப்போது வெறும் ரூ.300க்கு வாங்கப்பட்ட இந்த பங்குகளின் விலை இப்போது என்னவாக இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாகப் பங்குச்சந்தை என்றாலே பலரும் டிரேடிங் தான் செய்வார்கள். அதாவது ஒரு நாளில் தங்கத்தை வாங்கி, அதை விற்கவும் செய்வார்கள். இதன் மூலம் லாபம் பார்க்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் இதுபோல டிரேடிங் செய்யும் போது பெரும்பாலானோர் நஷ்டத்தையே எதிர்கொள்கிறார்கள். இதனால் ஒரு முறை நஷ்டமடைந்துவிட்டு, ஷேர்மார்கெட் பக்கமே பலரும் வராமல் இருந்துவிடுகிறார்கள்.

ஆனால், உண்மையில் ஷேர் மார்கெட் என்பது நீண்ட காலம் முதலீடு செய்வதற்கான ஒரு வழிமுறையாகும். குறுகிய கால டிரேடிங்கை விட நீண்ட காலம் முதலீடு செய்யும்போது மட்டுமே இதில் மிகப் பெரிய லாபத்தை அடைய முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
முதலீடு
அதாவது ஒரு கடையில் முதலீடு செய்தால்.. இன்று முதலீடு செய்துவிட்டு நாளை முதலீட்டை எடுக்க மாட்டோம். அதுபோல தான் ஒரு பங்கை வாங்கும் போது குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்து பார்ட்னர் ஆகுகிறீர்கள் என அர்த்தம். எனவே, அதுபோன்ற சூழல்களிலும் நாம் உடனடி லாபத்தை எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள். நீண்ட காலம் ஒரு பங்கை வைத்திருந்தால் பல மடங்கு லாபம் பார்க்க முடியும்.
இதற்கிடையே இதுபோல நீண்ட காலம் ஒரு பங்கை வைத்திருக்கும்போது எந்தளவுக்கு லாபம் பார்க்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு சம்பவம் நடந்துள்ளது. சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த அவர் தனது வீட்டில் தேடும்போது சுமார் 37 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட ரிலையன்ஸ் பங்குகளைக் கண்டுபிடித்துள்ளார். அப்போது வெறும் ரூ.30க்கு வாங்கப்பட்ட அந்த பங்குகளின் மதிப்பு இப்போது என்ன என்பது தெரிந்தால் தலையே சுத்திவிடும்.
10 ரூபாய் பங்குகள்
அந்தக் காலத்தில் பங்குகள் எல்லாம் பத்திரங்கள் வடிவிலேயே இருக்கும். அதைத் தான் இந்த நபர் கண்டுபிடித்திருக்கிறார். ஒரு ஷேர் ரூ.10 என்ற விலைக்கு 1987ம் ஆண்டு 20 பங்குகள், 1992ம் ஆண்டு 10 பங்குகள் என மொத்தம் 30 பங்குகளை அவர் வாங்கியிருக்கிறார். இது குறித்த போட்டோவை பகிர்ந்த அவர், "இந்த பங்குகளை வீட்டில் கண்டுபிடித்தோம். பங்குச்சந்தை குறித்து எனக்கு எதுவும் தெரியாது.. இந்த பங்குகளை என்ன செய்ய வேண்டும்" எனக் கேட்டுள்ளார்.
அதற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு பதில்களை அளித்து வருகிறார்கள். ஒரு யூசர் அதன் தற்போதைய மதிப்பு என்ன என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பதிவிட்டுள்ளார். அந்த நபரின் பங்குகள் வாங்கப்பட்ட பிறகு, மூன்று முறை பங்குகள் ஸ்ப்லிட் ஆகியுள்ளன. மேலும் இரண்டு முறை போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டால் அவரிடம் மொத்தம் 960 பங்குகள் இருக்கும்.
தற்போதைய மதிப்பு எவ்வளவு?
நேற்று புதன்கிழமை ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ரூ.1250க்கு நிறைவடைந்தது. அதை வைத்துக் கணக்கிட்டால் அந்த நபர் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு ரூ.12 லட்சமாகும். அதாவது 37 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.300க்கு வாங்கப்பட்ட பங்குகளின் விலை இப்போது பல மடங்கு அதிகரித்து ரூ.12 லட்சமாக இருக்கிறது. இதுவே நீண்ட கால முதலீட்டின் பிளஸ் பாயிண்ட் ஆகும்.
லாபத்தை பாருங்க:
அடுத்து இந்த பத்திர வடிவில் இருக்கும் பங்குகளை எப்படிப் பணமாக மாற்ற முடியும் என்ற கேள்விக்கு அரசின் IEPFA எனப்படும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் நேரடியாகப் பதிலளித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட காலத்திற்குப் பங்குகள் உரிமை கோரப்படாமல் இருந்தால் அவை IEPF-க்கு மாற்றப்படும் என்றும் IEPF தளத்தில் தேவையான தகவல்களைப் பதிவிட்டு, இதைச் சரி பார்க்கலாம் எனப் பதிலளித்துள்ளது. ரூ.300 மட்டும் முதலீடு செய்து லட்சக் கணக்கில் லாபம் பார்த்த இவரைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்க!












Click it and Unblock the Notifications