மெட்டா - மைக்ரோசாப்ட் அறிவிப்பால் ஒட்டுமொத்த டெக் துறையும் சோகம்.. 23000 பேர் பணிநீக்கம்
டெக் துறையில் மீண்டும் ஒரு பெரிய பணிநீக்க அலை உருவாகியுள்ளது. பொதுவாக பணிநீக்கம் என்பது நிறுவனத்தில் வருமானம் குறைந்தாலோ அல்லது வர்த்தக பிரிவு மோசமாக செயல்பாட்டாலோ நடக்கும். ஆனால் இப்போது ஒரு தொழில்நுட்பம் மிகவும் சிறப்பாக செயல்படுவதால் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர்.
ஒட்டுமொத்த டெக் துறையும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திற்காக பெரிய மாற்றத்தை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் வாயிலாக அமெரிக்க டெக் நிறுவனங்களாக மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சேர்ந்து சுமார் 23,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளன.

மெட்டா 8000 பேர் பணிநீக்கம்
சமுகவலைத்தளத்தில் மூடிசூடா மன்னாக விளங்கும் மெட்டா நிறுவனம் மிகத் தீவிரமான முடிவை எடுத்துள்ளது. இந்நிறுவனத்திற்குள் அனுப்பட்ட மெமோவில் ஊழியர்களுக்கு, மொத்த பணியாளர்களில் 10 சதவீதத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 8,000 ஊழியர்கள் தங்களுடைய பணியை இழக்க நேரிடும், மேலும் இந்த பணிநீக்கம் மே 20-ம் தேதி வரை தொடங்கும் என தெரிகிறது.
இதுமட்டும் அல்லாமல் தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களையும் நிரப்பாமல், இப்பணியிடங்களை அப்படியே நீக்கிவிட முடிவு செய்துள்ளது. இதேபோன்ற 10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் இந்த வருடத்தின் இறுதியிலும் நடத்த திட்டமிட்டு உள்ளது மெட்டா.
மைக்ரோசாப்ட் விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகம்
மைக்ரோசாப்ட் வேறு வழியை பின்பற்ற முடிவு செய்துள்ளது. உடனடி பணிநீக்கத்திற்கு பதிலாக அமெரிக்காவில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (வாலெண்டரி பை-அவுட்) திட்டத்தை வழங்குகிறது.
அமெரிக்க ஊழியர்களில் சுமார் 7 சதவீதம் கிட்டத்சட்ட 8,750 பேர் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியேற்றப்படலாம். வெளியேறும் ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிர்வாகம் பெரிய அளவிலான தொகையும், சிறப்பு சலுகைகளையும் கொண்ட இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த திட்டம் மூலம் ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் எதிர்கொள்வதை தாண்டி, குறைந்த பாதிப்புடனும் குறைக்க உதவும். இத்தகைய பெரிய அளவிலான விருப்ப ஓய்வு திட்டத்தை மைக்ரோசாப்ட் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் பல தரப்பு ஊழியர்களுக்கு பயன்படும், உதாரணமாக வயதான ஊழியர்கள், பணியில் விருப்பம் இல்லாமல் இருப்பவர்கள், ஓய்வை நோக்கி திட்டமிருபவர்கள், வேறு நிறுவனத்திற்கு மாற்ற திட்டமிடுபவர்கள், சொந்தமாக தொழில் துவங்க விருப்புவோர்.. என பண தேவையும், ஓய்வும் தேடும் ஊழியர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும்.
ஏஐ-க்காக பெரும் முதலீடுகள்
இரு நிறுவனங்களும் இத்தகைய முடிவுகளை எடுக்க காரணம் ஏஐ பிரிவில் அதிகளவிலான முதலீடு திட்டமிட்டுள்ளது தான். மைக்ரோசாப்ட் உலகம் முழுவதும் டேட்டா சென்டர்களை வேகமாக உருவாக்கி வருகிறது. ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் புதிய முதலீடுகளையும் அறிவித்துள்ளது. மெட்டா இந்த ஆண்டு சாதனை அளவிலான மூலதன செலவினத்தை செய்யத் திட்டமிட்டு, பல பில்லியன் டாலர் மதிப்பிலான கூட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
ஏன் பணிநீக்கம்?
ஏஐ அமைப்புகளை உருவாக்கவும் இயக்கவும் மிகப் பெரிய பணம் தேவைப்படுகிறது. டேட்டா சென்டர்கள், அதிநவீன சிப்கள், பெரிய கணினி உள்கட்டமைப்பு ஆகியவை மிக விலை உயர்ந்தவை. இந்த செலவுகளை சமன் செய்ய நிறுவனங்கள் செயல்பாட்டு செலவுகளை குறைக்க வேண்டியுள்ளது. அதற்கு வேகமான வழியாக ஊழியர்கள் பணிநீக்கம் செயல்படுகிறது.
நிதி ரீதியாக வலுவான நிறுவனங்களில்கூட இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் ஊழியர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. ஆனால், தொழில்துறைக்கு இது முக்கியமான காலகட்டமாகும். எதிர்காலம் ஏஐயைச் சுற்றியே கட்டமைக்கப்படும் என்பதை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தெளிவாக சொல்கின்றன. அதனால் நிதி மற்றும் அமைப்பு ரீதியாக தங்களை மறுசீரமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications