பெட்ரோல் ரூ.6, டீசல் விலை ரூ.3.67 உயர்வு - 2 மாதத்தில் கண்ணுக்கு தெரியாமல் அதிகரிப்பு...
பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் 3ரூபாய் 67 பைசாவும் கண்ணுக்கு தெரியவந்துள்ளது.
டெல்லி: ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை 6 ரூபாய் வரை பெட்ரோல் விலை அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. டீசல் விலை ரூ. 3.67 அதிகரித்துள்ளது. பெட்ரோல்-டீசல் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பெட்ரோல்-டீசல் விலையில் தினந்தோறும் லேசான மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் ஒருசில நாட்களை தவிர மீதமுள்ள நாட்களில் 2 முதல் 9 பைசா வரை அதிகரித்து தான் வருகிறது. இவ்வாறு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை 6 ரூபாய் வரை அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை, பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்தன. மாதத்தின் 1 மற்றும் 16ஆம் தேதி விலையில் மாற்றம் செய்யப்பட்டன. அப்போது விலை உயர்வு வெளிப்படையாகத் தெரிந்து வந்தது.

தினசரி விலை உயர்வு
ஆனால் ஜூன் 16ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினமும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தை விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்படுகிறது. அது பைசா கணக்கில் மாறுவதால் யாரும் பெரிதாக அதைக் கணக்கிட வாய்ப்பில்லாமல் போனது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு
இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஜூன் 16ஆம் தேதி டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.54.49 ஆக இருந்தது. ஜூலை 2ஆம் தேதி ரூ.53.36ஆக குறைந்தது. அத னைத் தொடர்ந்து டீசல் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மக்கள் உணரவில்லை
15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் நடக்கும் பட்சத்தில் 1 ரூபாய், 2 ரூபாய் என விலையில் மாற்றம் இருக்கும். ஆனால் தற்போது பைசா அடிப்படையில் விலை மாற்றம் இருப்பதால் இந்த விலை ஏற்றத்தை பொதுமக்கள் உணரவில்லை என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலை ஏற்றம்
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் நேற்றைய விலை ரூ.69.04 .சென்னையில் ரூ.71.45 ஆக இருந்தது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச விலை ஆகும். இதைப்போல டீசலும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ரூ.3.67 அதிகரித்து உள்ளது.

பைசா கணக்கில் விலை உயர்வு
இந்த விலை உயர்வு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நிகழ்ந்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
100 கோடி பேரிடம் 5 பைசா திருடினால் தப்பா என்ற அந்நியன் பட வசனம் ஏனோ நினைவில் வந்து போகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications