முதல்ல ஆலியா பட், இப்போ பிரியங்கா சோப்ரா.. அம்பானி குடும்பத்துக்கு யோகம் தான்!
இந்தியாவின் வேகமாக வளரும் அழகு மற்றும் பர்சனல் கேர் சந்தையில் ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் விதமாக, உலகப் புகழ்பெற்ற ஹேர் கேர் பிராண்டான பிரியங்கா சோப்ரா-வின் 'அனாமலி'யை (Anomaly) முழுமையாகக் கையகப்படுத்தியுள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இந்த பிராண்டை 2021-ல் தொடங்கினார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனாமலியின் அனைத்து அறிவுசார் சொத்துக்கள், டிரேட்மார்க், டிஜிட்டல் தளங்கள் என அனைத்தின் முழு உரிமையும் ரிலையன்ஸ் ரீடைலுக்கு கிடைத்துள்ளது. இதற்கான பணப் பரிவர்த்தனை விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இது ஒரு சாதாரண பிராண்ட் இல்லை என்பதால் கட்டாயம் பெரும் தொகைக்கு தான் ஈஷா அம்பானி வாங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனாமலி பிராண்ட் கிளீன், வீகன் (vegan) மற்றும் உயர் தரமான ஹேர் கேர் பொருட்களை மலிவு விலையில் வழங்குவதற்காக பிரபலமடைந்தது. உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த பிராண்ட், ரிலையன்ஸின் பெரிய சில்லறை வலையமைப்புக்கு நுழைந்துள்ளது, இது இரு தரப்புக்கும் பெரிய அளவிலான வளர்ச்சி வாய்ப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ரீடைல் தனது விரிவான ஆஃப்லைன் கடைகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் அனாமலியை இந்தியா முழுவதும் விரைவாக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸின் பிரீமியம் அழகு தளமான 'டிரா' (Tira) மூலம் இந்த பிராண்டை இந்திய வர்த்தக சந்தைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிரியங்கா சோப்ரா-வின் அனாமலி பிராண்ட் பொருட்கள் இனி பட்டிதொட்டியெல்லாம் கிடைக்கும் வகையில் ரிலையன்ஸ் இதன் நெட்வொர்கை விரிவாக்க உள்ளத.
இந்திய பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இத்துறையில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் ரீடைல் பல முன்னணி பிராண்டுகளை வாங்கியும், கூட்டணியும் வைத்து வருகிறது. இதில் ஒன்று தான் அனாமலி..

இதற்கு முன்பு ரிலையன்ஸ் ரீடைல் நட்கை அலியா பட் கொரோனா காலத்தில் தொடங்கிய 'எட்-ஏ-மாம்மா' பிராண்டில் பெரும் பங்கை வாங்கியது, இதற்கு முன்பு பாலிவுட்-ல் டாப் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் மனீஷ் மல்ஹோத்ராவின் லக்ஷரி ஃபேஷன் ஹவுஸில் 40% பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ்.
அமெரிக்க இசைக்கலைஞரான ரிஹானாவின் 'ஃபெண்டி பியூட்டி'யை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்தது என பல கைப்பற்றல் மற்றும் வர்த்தக கூட்டணி ஒப்பந்தத்தை ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் செய்து வருகிறது.
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், அலியா பட், ரிஹானா, மனீஷ் மல்ஹோத்ரா போன்ற பிரபலங்களுடன் இணைந்து ரிலையன்ஸ் ஒரு வலுவான நுகர்வோர் சுற்றுச்சூழலை உருவாக்கி வருகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications