எக்ஸிட் போல் எதிரொலி - பங்கு சந்தைகளில் ஏறுமுகம்
Subscribe to Oneindia Tamil

டெல்லி, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ளன. இம்மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.
இவற்றில் பாஜக, 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் என்றும் 2 மாநிலங்களில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் இன்று பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின் போது 450 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. இதேபோல் தேசிய பங்கு சந்தையான நிஃப்டியும் 145 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 30 பைசா அதிகரித்து இருந்தது.












Click it and Unblock the Notifications