தென்கொரியா போகும் இந்தியா மாம்பழங்கள் - அல்போன்சாவின் தேவை அதிகரிக்கும்
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய தென்கொரியா அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு அதிக அளவில் மாம்பழங்கள் ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
சியோல்: இந்தியாவில் மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. மல்கோவா, அல்போன்சா ஆகிய மாம்பழங்கள் நினைத்தாலே நாவில் நீர் ஊரும். இந்திய மாம்பழங்களுக்கு வெளிநாடுகளில் எப்போதுமே மவுசு உண்டு. குறிப்பாக அல்போன்சா உள்ளிட்ட பிரபல மாம்பழ ரகங்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய தென்கொரியா அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு அதிக அளவில் மாம்பழங்கள் ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தான் இந்திய மாம்பழங்களை உலகளவில் பிரபலப்படுத்தியவர். மாம்பழ சீசன் காலத்தில் நேரு வெளிநாடு சென்றாலே இந்திய மாம்பழங்களை குறிப்பாக அல்போன்சா மாம்பழங்களை தான் எடுத்து சென்று வெளிநாட்டு தலைவர்களுக்கு பரிசளிப்பாராம்.

இந்திய மாம்பழங்கள்
இந்தியாவைப் பொறுத்தவரை, பல வகையிலான மாம்பழங்கள் விளைவிக்கப் படுகின்றன. இதில் அல்போன்ஸா, பங்கனபள்ளி, சுவர்ணரேகா, நீலம் மற்றும் தோத்தாபுரி ஆகிய மாம்பழ வகைகள் அனைத்து மக்களாலும் அதிகமாக விரும்பப்படுகிறது. இந்த வகை மாம்பழங்களே அதிகமாக ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

மாம்பழ உற்பத்தி
இந்தியாவில், ஆந்திராவில்தான் அதிகமாக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதற்கு அடுத்து உத்திரப்பிரதேசம், கர்நாடகா, பீகார், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இந்திய மாம்பழ உற்பத்தியில் ஆந்திராவின் பங்கு மட்டும் 24.48% ஆகும்.

மாம்பழ ஏற்றுமதி
ஐக்கிய அரபு நாடுகள், இங்கிலாந்து, சவுதி அரேபியா, நேபாளம், குவைத், கட்டார், பஹ்ரைன், சிங்கப்பூர், மேற்கு ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் 41 ஆயிரம் டன் அளவுக்கு பல்வேறு வகையான மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மாம்பழ ஏற்றுமதிக்கு தடை
இந்தியாவின் அல்போன்சா மாம்பழங்களுக்கு எப்பொழுதுமே ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பு இருக்கும். ஓவ்வொரு சீசனிலும் அதிகளவில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் அல்போன்சா மாம்பழங்களை இறக்குமதி செய்ய கடந்த 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடைவிதித்தது. இதைப் பார்த்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது. இந்தியாவின் அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் ஒரு சில காய்கறிகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக பூச்சிக் கொல்லி ரசாயனம் உள்ளதாக கூறி, அவற்றின் இறக்குமதிக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பு தடை விதித்தது.

ரசாயன அளவு உத்தரவாத சான்றிதழ்
இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட அந்த தடை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்திய பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்யும் போது அவற்றில் உள்ள ரசாயன அளவு குறித்த உத்தரவாதச் சான்றிதழையும் சேர்த்து வழங்க வேண்டும் என அண்மையில் ஐக்கிய அரபு குடியரசு அறிவுறுத்தியிருந்தது.

மாம்பழ உற்பத்தியாளர்கள் பாதிப்பு
மாம்பழ ஏற்றுமதிக்கு இருந்த தடையால் கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து மாம்பழ ஏற்றுமதி 15 சதவீதம் சரிந்துள்ளது. 2015-16ம் ஆண்டில் 36,329 டன் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இதற்கு முந்தைய ஆண்டில் 42,998.31 டன் மாம்பழங்கள் இங்கிருந்து ஏற்றுமதியானதாகவும் ஏபிஇடிஏ குறிப்பிட்டுள்ளது. ஆனால், மதிப்பு அடிப்படையில் பெரிய வித்தியாசமில்லை. அதாவது 2015-16ம் ஆண்டில் 4.94 கோடி டாலர் மதிப்பிலான மாம்பழங்களும், அதற்கு முந்தைய ஆண்டு 5.02 கோடி டாலர் மதிப்பிலான மாம்பழங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தென்கொரியா அனுமதி
இந்நிலையில், பூச்சிக்கொல்லி மருந்து விவகாரத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய மாம்பழ இறக்குமதிக்கு, இந்த ஆண்டில் தென்கொரியா அனுமதி அளித்துள்ளது. தென்கொரியா கடந்த ஆண்டில் பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பெரு மற்றும் அமெரிக்காவில் இருந்து 4.8 கோடி டாலர் மதிப்பிலான மாம்பழங்களை இறக்குமதி செய்தது. தற்போது இந்தியாவுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதால், இது தென்கொரிய மாம்பழ சந்தையில் போட்டியை உருவாக்கியுள்ளது.

மாம்பழ ஏற்றமதிக்கு முன்பதிவு
இதுகுறித்து விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தியாளர், ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தென்கொரிய விலங்குகள் மற்றும் தாவர தொற்று தடுப்பு முகமை, வேபர் ஹீட் முறையில் மாம்பழங்களில் பூச்சிகளை நீக்கிய பிறகு, அவற்றை தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் உற்பத்தி செய்வோர் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்த விவசாயிகள், தென்கொரியாவுக்கு தாங்கள் ஏற்றுமதி செய்யும் மாம்பழம் குறித்து முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.

மாம்பழங்களின் தேவை
மாம்பழங்களை இறக்குமதிக்கு தென்கொரியா அனுமதி அளித்துள்ளதால், அங்கு மாம்பழ தேவை மற்றும் சப்ளை குறித்த விவரங்களை கோரியுள்ளாம். தென்கொரியாவுக்கு விரைவில் மாம்பழ ஏற்றுமதி தொடங்கும் என்று அகமதாபாத்தை சேர்ந்த மாம்பழ ஏற்றுமதியாளர் தெரிவித்துள்ளார்.

பொய்த்துப்போன பருவமழை
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் மா மரங்களில் மிக அதிகளவு பூக்கள் பிடிக்கவில்லை. ஜனவரி, பிப்ரவரியில் மழை பெய்திருந்தாலாவது காய்த்த மாங்காய் அனைத்தும் செழித்து வளர்ந்திருக்கும். நடப்பாண்டு வாய்ப்பு இல்லாமல் போனதால், மாங்காய் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.
சேலம் மாம்பழ சந்தைக்கு கடந்தாண்டு 35 சதவீதம் முதல் 50 சதவீதம்வரை மாம்பழ வரத்து இருந்தது. நடப்பாண்டு வரத்து, 40 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். இதனால் மாம்ழம் விலை முந்தைய ஆண்டுகளை விட உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications