2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!
தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்திய IT சேவை துறை 2030-க்குள் முடங்கிவிடும் என்ற கருத்து நிலவி வருகிறது. இதற்கு டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கே.கிருதிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
AI யுகத்தில் நிறுவனங்களுக்கு IT நிறுவனங்களின் சேவை வழக்கத்தை விடவும் அதிகமாகத் தேவைப்படும் என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இந்திய IT துறையின் இறுதி நாட்கள் வந்துவிட்டது என்ற செய்தியை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தத் துறை மிகுந்த திறன் கொண்டது என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துள்ளது" என்று அவர் வலியுறுத்தினார்.

இந்திய ஐடி சேவை துறையில் டிசிஎஸ், ஏஐ துறையில் முன்னோடியாக திகழ்கிறது, ஒருப்பக்கம் சேவை பிரிவு வாயிலாக 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானத்தை பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் ஏஐ டேட்டா சென்டர் வர்த்தகத்திலும் வளர்ந்து வருகிறது. இதன் மூலம் 360 கோணத்திலும் டிசிஎஸ் ஏஐ சேவை அளிக்கும் வகையில் தயாராகி வருகிறது.
செலவு குறைப்பு மட்டுமல்ல
இந்திய IT துறையின் வெற்றி என்பது குறைவான செலவில் சேவை அளிப்பது மட்டும் அல்லாமல் இந்திய ஐடி ஊழியர்களின் திறன் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறிய கிருதிவாசன். AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடையும் போது, பல நிறுவனங்கள் அதை தங்கள் அன்றாட பணியில் சரியான முறையில் ஒருங்கிணைக்கும் போராட்டமும், சவால்களும் அதிகமாக இருக்கும். அந்த இடைவெளியை நிரப்புவதற்கு IT சேவை நிறுவனங்கள் தான் உதவ முடியும் என்று அவர் விளக்கினார் கிருதிவாசன்.
எனவே AI தொழில்நுட்பத்தால் இந்திய ஐடி துறைக்கு அச்சுறுத்தல் அல்ல, மாறாக பெரும் வாய்ப்பு என்று கிருதிவாசன் நம்பிக்கை அளித்தார். இது ஐடி ஊழியர்களுக்கு புது உற்சாகத்தையும், தொடர்ந்து பணி உத்தரவாதம் இருக்கும் வாய்ப்பு இருப்பதையும் காட்டியுள்ளது.
ஆர்த்தி சுப்ரமணியன்
இதேபோல் டிசிஎஸ்ஃன் தலைமை செயல் அதிகாரியான ஆர்த்தி சுப்ரமணியன், கிளாட் கோவொர்க், கிளாட் மைதாஸ் போன்ற மேம்பட்ட AI அமைப்புகள் எங்களுக்கு எதிரி அல்ல, நமக்கு உதவும் கருவிகள் என்று அவர் கூறினார். பழைய மெயின்பிரேம் அமைப்புகள் போன்ற பல தசாப்தங்களாக உள்ள லெகசி சிஸ்டங்களை நவீனமயமாக்குவதில் GenAI பெரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
AI மூலம் தொழில்நுட்பக் கடன் (டெக்னிக்கல் டெப்ட்) குறையும், IT செயல்பாடுகளில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்று அவர் விளக்கினார். இது ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பலனைத் தரும் என்று தீவிரமாக நம்புகிறார்.
டிசிஎஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் சுமார் 23000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிய நிலையிலும், 44,000 டிரைனி ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. மேலும் அடுத்த பணியமர்த்தும் சுழற்சியில் 25,000 புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. மேலும், TCS கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய நிறுவன கைப்பற்றலை செய்துள்ளது, அமெரிக்காவைச் சேர்ந்த சேல்ஸ்ஃபோர்ஸ் கன்சல்டிங் நிறுவனமான கோஸ்டல் கிளவுட்டை 700 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications