200 ரூபாய்க்கு குறைவான விலை.. நச்சுன்னு 3 பங்குகள்..!!

Subscribe to Oneindia Tamil

இந்திய பங்குச்சந்தை கடந்த சில வாரங்களில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் லாபத்துடன் முடிவடைந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதேவேளையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் இன்னும் இந்திய சந்தைக்கு திரும்பவில்லை.

ஆனால் உள்நாட்டு முதலீட்டாளர்களும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் இந்த மந்த நிலையை பயன்படுத்தி நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை கணக்கிட்டு சரியான மதிப்பீடுகளை கொண்ட பங்குகளை வாங்க அதிகப்படியான தொகையை சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த மந்த நிலை வர்த்தகத்தை பலரும் புதிய முதலீட்டுக்கான வாய்ப்பாக கருதுகின்றனர். சமீப கால சரிவுக்குப் பிறகு குறைந்த விலையில் தரமான பங்குகளைத் தேர்வு செய்யும் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

50 Rs 200 Stock market India Nifty 50 Stocks under 200 Investment tips Trading ideas stocks under 200 India best penny stocks India 2026 Nifty 50 analysis today Mehul Kothari stock picks short term trading stocks India IRB Infrastructure target price GMR Airports stock outlook MRPL share price prediction Indian stock market recovery stock market volatility India buy low price stocks India technical analysis Nifty 50 stock market support resistance India top stocks to buy now India budget stocks India Rs 200 50 IRB Infrastructure GMR Airports MRPL support resistance stocks markets nifty50 Bank Nifty Nifty BSE Sensex Nifty Live gold price sgx nifty sensex live sensex today stock market today stock market stock market live updates stock market update sensex sensex live sensex live today share market today share market live stock market in tamil share market in tamil share market live in tamil sensex udpate in tamil share market today in tamil market today in tamil share market news in tamil stock market news in tamil nifty update in tamil sensex nifty nse bse

நிப்டி 50 மீண்டது

நிஃப்டி 50 குறியீடு கடந்த வார தொடக்கத்தில் 23,500 புள்ளிகள் அருகே சரிவை சந்தித்தது. ஆனால், குறைந்த நிலைகளில் வலுவான முதலீட்டு சூழ்நிலை உருவான காரணத்தால், சந்தை படிப்படியாக மீண்டு 24,400 புள்ளிகள் அருகே உயர்ந்தது. இறுதியில் 24,300 மேல் முடிவடைந்தது, இது சந்தையில் நிலையான முதலீட்டு சூழ்நிலை உருவாகியிருப்பதை காட்டுகிறது.

இந்த வாரம் நிஃப்டி 50 குறியீடு 23,603 புள்ளிகளில் இருந்து 24,370 புள்ளிகள் வரையில் உயர்ந்து சுமார் 3.18% உயர்வை பதிவு செய்துள்ளது. முக்கியமாக, இது தொடர்ச்சியான இரண்டாவது வார லாபமாகும், இது சந்தை மீண்டும் bullish பாதைக்கு நகரும் ஆரம்ப சிக்னலாக பார்க்கப்படுகிறது.

இந்த மீட்சிக்கு என்ன காரணம்?

சந்தை மீட்சிக்கு முக்கிய காரணங்களாக short covering, தேர்ந்தெடுத்த பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டது, முதலீட்டாளர்களின் மனநிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது போர் நிறுத்த சூழ்நிலைகள், டாலர் மதிப்பில் ஏற்பட்ட சிறிய தடுமாற்றம்.

சந்தை கணிப்பு

ஆனந்த் ரதி நிறுவனம் தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் துணைத் தலைவர் மெஹுல் கோத்தாரி, தற்போதைய சந்தை குறித்து எச்சரிக்கையான பார்வையை வெளியிட்டுள்ளார். மெஹுல் கோத்தாரி கணிப்பின் படி, நிப்டி 50 குறியீடு குறுகிய காலத்தில் எதிர்மறை வேறுபாடு (Negative Divergence) அறிகுறிகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக, 24,300 முதல் 24,500 வரையிலான பகுதி முக்கிய resistance மண்டலமாக உள்ளது. இந்த நிலையை அடைந்தபின், முதலீட்டாளர்கள் லாப பார்க்கும் பொருட்டு பங்குகளை அதிகளவில் விற்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.

இதனால், குறுகிய காலத்தில் நிப்டி 50 குறியீடு 23,600 முதல் 23,700 வரையிலான பகுதியை நோக்கி சிறிய pullback காணக்கூடும் எனவும் அவர் விளக்குகிறார். எனவே, முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

ரூ.200குள் கவனிக்க வேண்டிய பங்குகள்

இத்தகைய சந்தை சூழ்நிலையில், குறைந்த விலையில் கிடைக்கும் 3 பங்குகள் குறுகிய கால வர்த்தகத்திற்கு சிறப்பான வாய்ப்புகளை வழங்குவதாக மெஹுல் கோத்தாரி கூறுகிறார்.

ஐஆர்பி இன்பரா பங்கு ரூ.22.75 மேல் வாங்க பரிந்துரைக்கப்படுகிறது. இது ரூ.25 இலக்கை எட்டும் வாய்ப்பு உள்ளது. ரூ.21.60 ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் மெஹுல் கோத்தாரி.

ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் பங்கு ரூ.95 அருகே வாங்கலாம். இது ரூ.101 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது. ரூ.92 ஸ்டாப் லாஸ் வைத்து வெளியேறுவது பாதுகாப்பானது.

எம்ஆர்பிஎல் பங்கு ரூ.178 இல் வாங்க பரிந்துரைக்கப்படுகிறது. இது ரூ.198 வரை உயரக்கூடும். ரூ.168 ஸ்டாப் லாஸ் வைத்து வெளியேறுவது பாதுகாப்பானது என பரிந்துரை செய்துள்ளார்.

மொத்தத்தில், இந்திய பங்குச்சந்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளதற்கான ஆரம்ப சிக்னல்கள் தென்படுகின்றன. ஆனால், குறுகிய காலத்தில் சரிவு வாய்ப்பு இருப்பதால், முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சரியான பங்குகளைத் தேர்வு செய்து, தெளிவான இலக்கு மற்றும் stop loss கொண்டு செயல்பட்டால், இந்த சந்தை சூழ்நிலையில் நல்ல வருமான வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.oneindia.com அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+