For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்போசிஸ் வரலாற்றில் முதல்முறையாக...: நிறுவனர் அல்லாத விஷால் சிக்கா சிஇஓவாக நியமனம்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸின் சிஇஓவாக முன்னாள் எஸ்ஏபி ஏஜி எக்சிகியூட்டிவ் போர்டு உறுப்பினரான விஷால் சிக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக முன்னாள் எஸ்ஏபி ஏஜி எக்சிகியூட்டிவ் போர்டு உறுப்பினரான விஷால் சிக்கா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நிறுவனர் அ்லலாத ஒருவர் முதன்முறையாக இன்போசிஸ் சிஇஓவாக பொறுப்பேற்கிறார். அவர் தற்போதைய சிஇஓவான சிபுலாலிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக் கொள்வார்.

Vishal Sikka to head Infosys; Murthy, son Rohan to step down

47 வயதாகும் சிக்கா குஜராத் மாநிலம் வதோதராவில் பிறந்து அங்கு உள்ள ரோசரி உயர் நிலைப்பள்ளியில் படித்துவிட்டு நியூயார்க்கில் உள்ள சிரகுஸ் பல்கலைக்கழகத்தில் பி.எஸ். கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தார். அதன் பிறகு அவர் 1996ம் ஆண்டில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

முனைவர் பட்டம் பெற்ற பிறகு அவர் தனது சகோதரருடன் சேர்ந்து ஐபிரைன் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவினார். அதன் பிறகு அவர் போதா என்ற நிறுவனத்தை துவங்கினார்.

சிக்கா 2002ம் ஆண்டில் SAP நிறுவனத்தில் சேர்ந்தார். இதையடுத்து 2010ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் இயக்குன் குழுவில் சேர்க்கப்பட்டார்.

பிளாக்கில் (blog) எழுதும் பழக்கம் உள்ள அவருக்கு ட்விட்டரில் 14 ஆயிரம் பாலோயர்கள் உள்ளனர்.

English summary
Infosys has appointed former SAP AG executive board member Vishal Sikka as Chief Executive Officer. It is the first time that a non founder is going to be a CEO of Infosys.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X