டிஜிட்டல் தங்கம் வேண்டவே வேண்டாம்.. 10 பைசா கூட வராது! செபி எச்சரிக்கைக்கு என்ன காரணம்! பகீர் தகவல்
சென்னை: இந்தியர்கள் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதற்கிடையே டிஜிட்டல் தங்கம் தொடர்பாகச் செபி கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. செபி அப்படியொரு எச்சரிக்கை வெளியிட என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியர்கள் எப்போதும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இப்போது தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டதால் அதை வாங்கவே பெரும் தொகை தேவைப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், இப்போது டிஜிட்டல் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். ஏகப்பட்ட நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் தங்கத்தை விளம்பரப்படுத்துகிறார்கள்.

செபி எச்சரிக்கை
ரூ.50 என்ற சிறிய தொகையில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.. திருட்டு போகுமோ என்ற அச்சம் தேவையில்லை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் இந்த டிஜிட்டல் தங்கத்தில் ஆர்வமாக முதலீடு செய்கிறார்கள். இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் தங்கம் தொடர்பாகச் செபி மிக முக்கிய வார்னிங்கை வெளியிட்டது.
இந்த டிஜிட்டல் தங்கம் செபியால் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் அவை பத்திரங்களாகவோ அல்லது டெரிவேட்டிவ்களாகவோ வகைப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, இவை அதன் அதிகார வரம்பிற்கு வெளியே இருப்பதாகச் செபி கூறியது. அதாவது நாளை எதாவது பிரச்சனை என வந்தால் உங்கள் பணம் மொத்தமாகப் போய்விடலாம்.. மேலும், செபியின் முதலீட்டாளர் பாதுகாப்பு கட்டமைப்பின் கீழ் உங்களுக்கு எந்தச் சட்டப் பாதுகாப்பும் இருக்காது என்று சொல்ல வருகிறார்கள்.
சிக்கல் என்ன
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் பங்குச்சந்தை நிறுவனங்கள் செபி கண்காணிப்பில் இயங்கும். வங்கிகள் ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இயங்கும். ஆனால், டிஜிட்டல் கோல்ட் இந்த இரண்டிற்குக் கீழும் வராது. எனவே, நாளை பிரச்சனை வரலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி செபி கூறுகிறது.
செபி ஏன் இதில் ரிஸ்க் இருக்கிறது என்று சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முதலில் டிஜிட்டல் தங்கம் எப்படி வேலை செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு செயலியில் டிஜிட்டல் தங்கத்தை 500 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால்.. அதே அளவுக்குத் தங்கத்தைச் சந்தையில் இருந்து அந்த நிறுவனம் வாங்கி வைக்க வேண்டும். அதாவது நீங்கள் டிஜிட்டலாக வாங்கும் தங்கத்தை அந்த நிறுவனம் physicalஆக வாங்க வைக்க வேண்டும் என்பதே இதன் கான்செப்ட்!
செக் செய்ய யாரும் இல்லை
பிரச்சனை என்னவென்றால், நிஜமாகவே அந்த நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வைக்கிறார்களா என்பதைச் சரி பார்க்கச் செபி அல்லது எந்தவொரு நிறுவனத்தாலும் முடியாது. நாளையே சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் திவாலானால் என்ன நடக்கும் என்பதற்கான தெளிவான சட்டக் கட்டமைப்பும் இல்லை. மியூச்சுவல் பண்டுகள் மற்றும் ஷேர் டிரேடர்கள் செபியின் விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டி இருக்கும். ஆனால், டிஜிட்டல் தங்கத் தளங்களுக்குச் செபி விதிகள் பொருந்தாது என்பதே சிக்கல்.
அதனால் தான் செபியின் எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், செபி டிஜிட்டல் தங்கத்தை வாங்க வேண்டாம் என்றும் சொல்லவில்லை.. அதில் இருக்கும் ஆபத்துக்களை அறியாமல் ஒழுங்குபடுத்தப்படாத தங்கத்தை வாங்க வேண்டாம் என்று மட்டுமே அது கூறுகிறது. டிஜிட்டல் தங்கத்தை விற்கும் பல நிறுவனங்கள் நேர்மையானது என்றாலும் கூட சில நிறுவனங்களில் பிரச்சனை இருக்கிறது என்பதையே செபி சொல்கிறது.
பணம் போய்விடும்
இது தொடர்பாக முதலீட்டு ஆலோசகர் அபிஷேக் குமார் கூறுகையில், "இதன் மூலம் டிஜிட்டல் தங்க செயலிகளின் செபியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைச் செபி தெளிவுபடுத்துகிறது. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், முதலீட்டாளர்களுக்கு செபியின் பாதுகாப்பு கிடைக்காது. டிஜிட்டல் தங்க தளங்களுக்கு எந்தவித ஒழுங்குமுறை மேற்பார்வையும் இல்லை. இதனால் முதலீட்டாளர்கள் இந்தத் தளங்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவது கடினம். இதனால் மக்கள் தங்கள் பணத்தை இழக்கும் அபாயம் இருக்கவே செய்கிறது" என்றார்.
அப்போது என்ன செய்யலாம்
டிஜிட்டல் தங்கத்திற்குப் பதிலாக கோல்ட் எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்டுகள் (ETFs) மற்றும் எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்ட்களில் (EGRs) முதலீடு செய்யலாம் என்றே செபி கூறுகிறது.. பங்குச்சந்தையில் எப்படி நீங்கள் பங்குகளை வாங்குகிறீர்களோ அதுபோல இதையும் நீங்கள் வாங்கலாம்! இவை நேரடியாகச் செபி கட்டுப்பாட்டில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications