நவம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 4.64% ஆக சரிவு! சில்லறை பணவீக்கம் 2.33%

நவம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 4.64% ஆக சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததினால் உணவுப் பொருட்கள் விலையும் குறையக் காரணமாக அமைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் கடந்த மாதத்தில் 4.64 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. அக்டோபர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.28 சதவீதமாக இருந்தது வந்தது, இதுவே தற்போது 4.64 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. நவம்பர் மாத சில்லறை பணவீக்கம் 17 மாத சரிவுடன் 2.33 சதவிகிதமாக உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததினால் உணவுப் பொருட்கள் விலையும் குறையக் காரணமாக அமைந்துள்ளது.

மொத்த விலை குறியீடு நவம்பர் மாதம் 4.64 சதவிகிதமாகக் குறைந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.28 சதவிகிதமாக இருந்தது வந்தது, இதுவே தற்போது 4.64 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

சிமெண்ட், ஜவுளி

சிமெண்ட், ஜவுளி

உற்பத்தித் துறையில் நவம்பர் மாத பணவீக்கம் 4.21 சதவிகிதமாக உள்ளது. இதுவே அக்டோபர் மாதம் 4.49 சதவிகிதமாக இருந்தது.

உணவு, சர்க்கரை, சிகரெட், இரசாயன பொருட்கள், சிமெண்ட் மற்றும் ஜவுளி பொருட்கள் தயாரிப்பின் மொத்த விலை பணவீக்கம் 64.2 சதவிகிதமாகும். எண்ணெய் மற்றும் மின்சாரத் துறையில் மொத்த விலை குறியீடு 13.2 சதவிகிதமாக உள்ளது.

சரிவுக்குக் காரணம்

சரிவுக்குக் காரணம்

அதேநேரத்தில், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்ததன் எதிரொலியாக, பணவாட்ட மதிப்பும் 26 புள்ளி 98 விழுக்காடாக குறைந்தது. இந்தக் காரணங்களால், மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 4.64 சதவீதமாக குறைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததினால் உணவுப் பொருட்கள் விலையும் குறையக் காரணமாக அமைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இதுவே குறைந்தபட்ச மொத்த விலை பணவீக்கம் ஆகும். தேர்தல் காரணங்களுக்காகப் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் டிசம்பர் மாத பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரிசர்வ் வங்கி கூட்டம்

ரிசர்வ் வங்கி கூட்டம்

நவம்பர் மாத சில்லறை பணவீக்கம் 17 மாத சரிவுடன் 2.33 சதவிகிதமாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டத்தின் போது பணவீக்கத்தைக் கணக்கிட சில்லறை பணவீக்கத்தை வைத்துக் கணக்கிடும் என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை குறைந்ததால், நவம்பர் மாதத்தில் எரிபொருள் மீதான பணவீக்கம் 16 புள்ளி 28 விழுக்காடாக உயர்ந்தது.

உணவு விலை பணவீக்கம்

உணவு விலை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் 3.31 சதவிகிதமாக இருந்தது. அதுவே நவம்பர் மாதம் மேலும் சரிந்து 2.33 சதவிகிதமாக உள்ளது.

தொழில் துறை உற்பத்தி குறியீடு செப்டம்பர் மாதம் இருந்த 4.5 சதவிகிதத்தில் இருந்து அக்டோபர் மாதம் 8.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதம் 0.86 சதவிகிதமாக இருந்த உணவு விலை மீதான பணவீக்கம், நவம்பர் மாதம் 2.61 சதவிகிதமாக உள்ளது.

போக்குவரத்து செலவு குறைவு

போக்குவரத்து செலவு குறைவு

காய்கறி மீதான பணவீக்கம் 15.59 சதவிகிதமாக உள்ளது. தொடர்ந்து 4வது முறையாக ஆர்பிஐ வைத்த இலக்கிற்குள்ளேயே சில்லறை பணவீக்கம் உள்ளது. கடந்த சில வாரங்களாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்ததும் பணவீக்கம் சரிந்ததற்கான காரணம் ஆகும். இதனால் போக்குவரத்துச் செலவுகள் குறைந்தது. செப்டம்பர் மாதம் 4.6 சதவிகிதமாக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சி அக்டோபர் மாதம் 7.1 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+