தங்கம் மீண்டும் உயர்வது ஏன்? பொதுமக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான இரண்டு விஷயம்
சென்னை: அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் சீனாவின் தங்கக் கொள்முதல் காரணமாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மிரா அசெட் ஷேர்கானில் நாணயங்கள் மற்றும் பொருள்கள் பிரிவின் மூத்த அடிப்படை ஆராய்ச்சி ஆய்வாளர் பிரவீன் சிங், தங்கம் விலை குறையும் போது வாங்கி வைத்து கொள்வது என்று பரிந்துரை செய்துள்ளார். தங்க விலை கண்ணோட்டம் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய நிலைகள் குறித்து பார்ப்போம்.

அமெரிக்க அரசாங்கத்தின் பணி நிறுத்தம்விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தாலும், கடந்த வெள்ளிக்கிழமை ஏற தொடங்கிய தங்கம்,இன்று மீண்டும் கடுமையாக உயர்ந்தது. இதற்குக் காரணம்: ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு மற்றும் நிலையற்ற அமெரிக்க டாலர் மற்றும் சீனா மத்திய வங்கி தொடர்ந்து 12-வது மாதமாக (அக்டோபரில்) தங்க இருப்புகளை அதிகரித்து போன்றவை காரணம் ஆகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் மற்ற நாடுகளில் வசூலித்த கூடுதல் வரிகள் மூலம் ஒரு நபருக்குக் குறைந்தபட்சம் $2000 தள்ளுபடிக் காசோலைகளை (அதிக வருமானம் ஈட்டுபவர்களைத் தவிர்த்து) அமெரிக்கர்களுக்கு அனுப்பும் யோசனையை மீண்டும் முன்வைத்துள்ளார். இதனால் அமெரிக்காவில் மீண்டும் பணவீக்கக் கவலைகள் அதிகரித்தது.இதுவும் தங்கம் விலை அதிகரிக்க காரணம் ஆனது.
தங்கம் விலை நவம்பர் 11ம் தேதியான இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 93,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 11,700 ரூபாய்க்கு சென்னையில் விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு 1760 ரூபாய் உயர்ந்துள்ளது.
அமெரிக்கப் பணி நிறுத்தம் முடிவுக்கு வர வாய்ப்பு
நவம்பர் 9 ம் தேதி அமெரிக்க செனட் சபை, நீண்ட காலமாக நடந்து வரும் அரசாங்கப் பணி நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இதனை ஜனநாயகக் கட்சியினரின் ஒரு பிரிவினர் தங்கள் கட்சித் தலைவர்களின் முடிவை மீறி, நடந்து வரும் பணி நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்
கனமழையால் விமானச் சேவைகளில் இடையூறுகள் அதிகரித்துள்ள நிலையில், வரவிருக்கும் குளிர்காலத்திற்கு முன்னதாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஊதியம் இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதால், நடந்து வரும் பணி நிறுத்தம் அமெரிக்க விமானப் போக்குவரத்து அமைப்பின் மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தும்.
ஃபெட் அதிகாரிகளின் கருத்து
அமெரிக்க வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகள், நிதி ஆதரவு, கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் அரசாங்கத்தின் பணி நிறுத்தம் முடிவுக்கு வருவது ஆகியவற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வலுவாக மீண்டு வரும் என்று செயின்ட் லூயிஸ் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் முசாலெம் எதிர்பார்க்கிறார். மேலும், தற்போதைய ஃபெட் கொள்கை பணவீக்கத்தில் எந்தவிதமான கீழ்நோக்கிய அழுத்தத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் கருதுவதால், கூடுதல் விகிதக் குறைப்புகளில் ஃபெட் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேநேரம் சான் பிரான்சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் மேரி டேலி, தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில் சுணக்கம் மற்றும் ஊதிய வளர்ச்சி விகிதம் வளர்ச்சி பெறாத காரணத்தால், வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு அதிகமாக வைத்திருக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.
அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை நவம்பர் மாதத்தில் வெளியிடப்படவில்லை, இதனால் தேசிய வேலைவாய்ப்பு அறிக்கை இல்லாமல் இது இரண்டாவது மாதமாக இருக்கிறது. ப்ளூம்பெர்க் மதிப்பீடுகளின்படி, அமெரிக்க அரசாங்கம் பணி முடக்கம் முடிந்து செயல்படும் தேதியைப் பொறுத்து, செப்டம்பர் மாத வேலைவாய்ப்பு அறிக்கை நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 அன்று வெளியிடப்படலாம். அப்போதும் கூட, அமெரிக்க அரசின் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த அறிக்கை உண்மையான நிலவரத்தைக் கொடுக்காமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இது ஒருபுறம் எனில், சீனாவின் உள்நாட்டு தங்க இருப்புகள் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 79.015 டன்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 29.927 டன்கள் தான் அதிகமாக தங்கத்தின் இருப்பை அதிகரித்தது. என இப்போது மிகப்பெரிய அளவில் தங்க இருப்பை சீன அதிகரித்ததும், தங்கம் விலை சர்வதேச சந்தையில் உயர காரணமாக அமைந்துள்ளது.
விலை அதிகரிக்க காரணம் என்ன
அமெரிக்க அரசாங்கத்தின் பணி முடக்கம் முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதால், வரவிருக்கும் அமெரிக்கத் தரவுகள் பொருளாதாரம் மோசமடைந்து வருவதைக் காட்டலாம் என்ற காரணத்தால், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் அக்டோபரில் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித எதிர்பார்ப்புகளின் பக்கம் திரும்பி இருக்கிறது. இதேபோல் சீனாவும் தங்கத்தை வாங்கி குவிக்கிறது. இரண்டுமே தங்கம் விலை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.
மிகக் குறுகிய காலத்தில், தங்கம் விலை சற்று சரியும் என்றும், அதன் பின்னர் மீண்டும் தங்கம் விலை கடுமையாக உயரும் என்றும். எனவே தங்கம் விலை குறையும் போது வாங்கி வைப்பது நல்லது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
-
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications