ஆர்டர் செய்ய செல்போனை எடுத்தால் பெரிய அதிர்ச்சி.. இவ்வளவு சீக்கிரம் இப்படி மாறும்னு நினைக்கவே இல்லை
சென்னை: இப்போது பெரும்பாலான மக்களுக்கு இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் மூலம் ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், சமீப காலமாக இதுபோன்ற இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளில் ஆர்டர் செய்வோருக்கு அதிர்ச்சியே கிடைக்கிறது. என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் ஷாப்பிங் செய்யும் முறையை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் எப்படி மாற்றியதோ.. அதேபோலத் தான் இப்போது இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளும் நமது ஷாப்பிங் முறையை மாற்றி வருகிறது. இன்ஸ்டன்ட் டெலிவரி மூலம் ஆர்டர் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள்
ஆனால், சமீப காலமாக இந்த இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளை ஓபன் செய்தால் பலருக்கும் அது பேரதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது. ஏனென்றால் வழக்கமான கட்டணங்களைக் காட்டிலும் கூடுதல் கட்டணங்களை இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் சேர்க்க ஆரம்பித்துள்ளன. அங்குக் கொஞ்சம், இங்குக் கொஞ்சம் என இந்த நிறுவனங்கள் போடும் கட்டணங்கள் கணிசமான தொகையாக மாறிவிடுகிறதாம்.
கூடுதல் கட்டணங்கள்
இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் மக்களிடையே பிரபலமாக இருந்தாலும் கூட இன்னுமே பெரும்பாலான ஆர்டர்களில் அவை நஷ்டத்தையே எதிர்கொள்கின்றன. இதனால் வருவாயை அதிகரிப்பதற்காக இதுபோன்ற கட்டணங்களை வசூலிக்க ஆரம்பித்துள்ளனர். பிளாட்பார்ம் பீஸ், ஹேண்டிலிங் சார்ஜ், கன்வினியன்ஸ் சார்ஜ், ஸ்மால் கார்ட் சார்ஜ், மழை சார்ஜ் என கூடுதல் கட்டணங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவே பொதுமக்களுக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
இந்தியாவின் டாப் 5 இன்ஸ்டட் டெலிவரி செயலிகளில் ஆய்வு செய்து இது குறித்த விவரங்களை எகானி டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த கட்டணங்கள் வழக்கமான டெலிவரி கட்டணங்களுக்கு மேல் வசூலிக்கப்படுகிறதும். மேலும், இவை நகரங்களைப் பொறுத்தும், ஒவ்வொரு தளங்களைப் பொறுத்தும் மாறுபடுகிறதாம். மேலும், ஒவ்வொரு ஆர்டருக்கும் 6 முதல் 30 வரை வசூலிக்கப்படுகிறது.
சார்ஜ் மேல் சார்ஜ்
ஜெப்டோவை பொறுத்தவரை ஹேண்டில் சார்ஜ் என கட்டணம் வசூலிக்கிறார்கள். அதாவது உங்கள் ஆர்டர்களை அவர்கள் டார்க் ஸ்டோர்களில் கையாளுவதற்கான கட்டணம் இது.! அதன் போட்டியாளரான பிளிங்இட், சரியான முறையில் கையாள மற்றும் விரைவான டெலிவரிகளுக்கு எனச் சொல்லி தனியாகக் கட்டணம் வசூலிக்கிறது. அதேநேரம் அதிக தொகைக்கு ஆர்டர் செய்யும்போது இரு நிறுவனங்களும் பொருட்களின் ரேட்டை குறைக்கிறது. ஆனால், ஹேண்டில் சார்ஜ் பெரிய ஆர்டர்களுக்கு அதிகரிக்கவே செய்கிறது.
அதுபோல தனியாக சர்ஜ் பீஸ் என ஒன்றும் வசூலிக்கப்படுகிறது. காலை, மாலை என பீக் ஹவர்ஸ், டெலிவரி பணியாளர்கள் குறைவாக இருக்கும்போது இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல குறைந்த தொகைக்கு ஆர்டர் செய்யும்போது ஸ்மால் கார்ட் பீஸ் என்றும் தனியாகக் கட்டணத்தை வசூலிக்கிறது. இந்தியாவில் இப்போது பிளிங்இட், இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ ஆகியவை தான் இன்ஸ்டட் டெலிவரியில் 85% வரை வைத்திருக்கிறது. அந்த மூன்று நிறுவனங்களுமே இதுபோல பல சார்ஜ்களை வசூலிக்கின்றன.
என்ன காரணம்
மேலும், பெரும்பாலான தளங்கள் இலவச டெலிவரிகளைப் பெறக் குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பையும் உயர்த்தியுள்ளன. சராசரி ஆர்டர் மதிப்பை உயர்த்தவே இந்த நடவடிக்கையை இன்ஸ்டட் டெலிவரி செயலிகள் எடுத்துள்ளன. அதாவது குறைந்த ஆர்டர்களில் அதிகப் பொருட்களை விற்க முடிந்தால் அது அவர்களுக்கு லாபம் தான். இதன் காரணமாகவே குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பை உயர்த்தி வருகிறார்கள்.
இது தொடர்பாகப் பிரபல இன்ஸ்டன்ட் டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்யும் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளைப் பொறுத்தவரை பிளாக் ஸ்டார்களால் தான் அதிக நஷ்டம். அதைத் தவிர்த்துப் பார்த்தால், நஷ்டங்களை அதிகரிப்பதில் டெலிவரி செய்ய ஆகும் செலவே பிரதானக் காரணம். இதன் காரணமாகவே இதுபோன்ற சார்ஜ்களை வசூலிக்க வேண்டி இருக்கிறது" என்றார்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications