அடுத்த 6 மாதத்தில் 60% எகிறும் தங்கம் விலை? இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்! என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: கடந்த ஓராண்டாக உச்சத்திற்குப் பறந்த தங்கம் விலை, இப்போது சற்று ஆசுவாசமாக இருக்கிறது. சில நாட்கள் விலை உயர்ந்தாலும் கூட அது பெரியளவில் இல்லை. இதற்கிடையே தங்கம் விலை வரும் காலங்களில் எப்படி இருக்கும்.. இனியும் அது எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை கொரோனாவுக்கு பிறகு இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதிலும் இந்தாண்டு தொடக்கத்தில் அது கிட்டத்தட்ட ஜெட் வேகத்தில் பாய ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம். கண்ணிமைக்கும் நேரத்தில் கிட்டத்தட்ட ரூ.12,000ஐ தொட்டுவிட்டது. இப்போது சில வாரங்களாகப் பெரியளவில் ஏற்றம் இல்லாமல் இருக்கிறது.

ஆனந்த் சீனிவாசன்
2,3 நாட்கள் ஏறினால் அதன் பிறகு சரிவது என மாறி மாறியே இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "ரஷ்யா தங்கத்தை விற்பதாகச் சில தகவல்கள் பரவின. ரஷ்ய ஊடகங்களே இந்தத் தகவல்களைப் பரப்பின. ஆனால், அதை நம்பக் கூடாது. ரஷ்யாவில் ஒரு சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறது. அவர்கள் என்ன செய்தியை வேண்டுமானாலும் வெளியிடுவார்கள். நாம் தான் சரியான சர்வதேச ஊடகத்தைப் பார்க்க வேண்டும். ரஷ்ய ஊடகங்கள் சொல்வதை நம்புவதே தவறு.
ரியல் எஸ்டேட்
ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவே இதைச் செய்கிறார்கள். இப்படித் தான் ஒருவர் தங்கம் 1800 டாலருக்கு போகும் எனச் சொன்னார். அதை 3 நாட்களுக்குப் பரபரப்பாகப் பேசினார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. (Rich dad Poor dad) ஆசிரியர் ராபர்ட் கியாசக்கி கூட பெரிய ஆபத்து வந்துவிட்டது. இனி அவ்வளவு தான் எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அந்த ஆள் அப்படித் தான் உளறிக்கொண்டே இருப்பார். 10 வருடமாக இந்தியாவில் ரியல் எஸ்டேட் மார்க்கெட் ஏறவில்லை. ரிச் டாட் பூர் டாட் புத்தக்கத்தை பார்த்து யாராவது கடன் வாங்கி வீட்டை வாங்கி இருந்தால் என்ன ஆகியிருக்கும் யோசித்துப் பாருங்கள்.
வாய்ப்பில்லை
பணம் சேர்ப்பது ரொம்ப கடினம்.. இந்தாண்டை போல அடுத்தாண்டும் தங்கம் விலை 50% வரை ஏறுமா என கேட்டால்.. நிச்சயம் ஏறாது. அதிகபட்சம் 5 அல்லது 15% உயரலாம்.. எல்லாம் அமெரிக்க பெடரல் அரசு கையில் தான் இருக்கிறது.
மேலும், ரஷ்யா பட்ஜெட் பற்றாக்குறையால் தங்கத்தை விற்பதாகக் கிளப்பிவிட்டனர். ஆனால், ஒரு நாட்டிற்கு பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டால் அது அதிக ரூபல்களை அடிப்பார்கள். அதுபோல செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும். அதற்கும் தங்கம் விலைக்கும் சம்பந்தமே இல்லை. அந்நிய செலாவணி பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே தங்கத்தை விற்பார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பு இருப்பது போலத் தெரியவில்லை.
அடுத்து என்ன
தங்கம் விலை கடந்த 2 ஆண்டுகளில் 50 முதல் 60% ஏறி இருக்கிறது. எனவே, அது கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கும். எனவே, அடுத்தாண்டும் தங்கம் விலை இதே அளவுக்கு உயருமா என கேட்டால் உயராது. அடுத்த 6 மாதம் தங்கம் விலை இப்படித்தான் படுத்திருக்கும். ரெஸ்ட் எடுக்காமல் தங்கம் விலை ஏறிக் கொண்டே இருக்காது" என்றார்.
-
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Gold Rate: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு ஷாக்.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல்












Click it and Unblock the Notifications