ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு
டெல்லி: ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி ரயில்களுக்கான கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி ரயில்களில் வழங்கப்படும் உணவுக் கட்டணம் 2 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில்களில் பயணம் செய்யும் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வை சமன்செய்ய குறிப்பிட்ட ரயில்களில் கடந்த 7ம் தேதி தான் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்கள் புதிய கட்டணத்தின்படி உள்ள கூடுதல் தொகையை டிடிஇயிடம் அளிக்க வேண்டும்.

மெட்ராஸ் ராஜ்தானி
புதிய கட்டணத்தின்படி டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் செல்ல ரூ. 4,289 செலவாகும். முன்னதாக இந்த கட்டணம் ரூ.3,980 ஆக இருந்தது. மெட்ராஸ் ராஜ்தானி மூலம் சென்னை செல்ல ரூ. 3,385 கட்டணம் செலுத்த வேண்டும். முன்னதாக இந்த கட்டணம் ரூ.3,285 ஆக இருந்தது.

14 ஆண்டுகள் கழித்து
முன்னதாக கடந்த 1999ம் ஆண்டு தான் ரயிலில் வழங்கப்படும் உணவுக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 14 ஆண்டுகள் கழித்து தற்போது உணவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை ராஜ்தானி
மும்பை ராஜ்தானியின் இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.2,435ல் இருந்து ரூ. 2,510 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஹவ்ரா ராஜ்தானியின் இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.2,4390ல் இருந்து ரூ. 2,554 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புவனேஸ்வர் செல்லும் புவனேஸ்வர் ராஜ்தானியின் கட்டணம் ரூ.14 உயர்த்தப்பட்டுள்ளது. அதுவே அங்கிருந்து டெல்லி திரும்புகையில் ரூ. 87 கூடுதலாக செலுத்த வேண்டும்.

மீன் வருவல்
முதல் வகுப்பு ஏசி பெட்டி மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்பில் மீன் வருவல், மற்றும் மீதமுள்ள பிரீமியர் ரயில்களின் அனைத்து வகுப்புகளிலும் ஸ்டப்டு பரோட்டா, சன்னா குல்சா, பிளேவர்டு பால் புதிதாக வழங்கப்படும். புதிய மெனுவில் சாக்லேட், டாஃபி, பழ ரசம் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளது.

டீ விலை குறைவு
காலை மற்றும் மாலை வேளையில் வழங்கப்படும் டீயின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்று வேளை வழங்கப்படும் உணவின் விலை 50 முதல் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

காம்போ மீல்
ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயில்களில் வழக்கமாக வழங்கப்படும் மதியம் மற்றும் இரவு உணவின் விலையில் பாதி விலையில் காம்போ மீல் வழங்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications