இந்தியாவையே விமர்சிக்கிறீர்களா? - அமெரிக்காவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் மறைமுக பதிலடி
டெல்லி : ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை அண்மைக் காலமாக கேட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்து உள்ளார்.
இந்தியா - பிரிட்டன் வியூக வகுப்பு மன்றத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் ட்ரஸ் கலந்துகொண்டார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து வரும் நிலையில், நோட்டோ கூட்டமைப்பில் உள்ள மிக முக்கிய நாடான பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம்
இந்த கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், "அண்மை காலங்களாக இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று கொண்டிருக்கும் பிரச்சாரத்தை நான் கவனித்து வருகிறேன். ரஷ்யாவிடம் அதிகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது ஐரோப்பிய நாடுகள்தான். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமே 15% கூடுதலாக எண்ணெய் வாங்கி இருக்கின்றன.

அரபு நாடுகளிடம்தான் அதிக எண்ணெய் இறக்குமதி
இந்தியாவுக்கு தேவையான எண்ணெய்யின் கணிசமான அளவை மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்தே வாங்கி வருகிறோம். 7 முதல் 8% வரை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து ஒரு சதவீதத்திற்கு குறைவான அளவிலேயே இந்தியா எண்ணெய் வாங்குகிறது.

மாற்று சந்தையை தேடுவது இயற்கைதான்
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் முதல் 10 நாடுகளில் இந்தியா இல்லை. இந்த பட்டியலில் எப்போதும் இந்தியா இருக்காது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். எண்ணெய் விலை உயரும்போது நாடுகள் பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு, குறைவான விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்கும் சந்தைகளை பார்ப்பது இயற்கையானதே! இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் காத்திருந்தால், ரஷ்யாவிடம் யார் அதிகளவில் எண்ணெய்யையும் எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் கருத்து
ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர், "இந்தியா இறையாண்மை மிக்க ஒரு நாடு. இந்தியா என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று நான் எதுவும் சொல்ல மாட்டேன். இந்தியாவிடம் இருந்து உக்ரைனுக்கு ஆதரவு இருக்கிறது என வலுவாக நம்புகிறேன். ஆனால் இதுவும் மற்ற நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதும் ஒன்றல்ல." என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications