தப்புமா பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு.. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எம்எல்ஏக்களை வளைக்க பாஜக வலை
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
சில மாதங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை பெற்றது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்றியதோடு, டெல்லியை கடந்து ஆம் ஆத்மி தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தியது.
இந்த சூழலில் பாஜக ஆபரேசன் தாமரையை பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்த முயற்சித்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை பாஜக அணுகியதாக குற்றம்சாட்டினார்.

ஆபரேஷன் தாமரை
அதேபோல் பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் ஹர்பால்சிங் சீமா கூறுகையில், ஆபரேஷன் தாமரை திட்டத்தை பஞ்சாப்பில் செயல்படுத்த பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், ஒரு எம்எல்ஏ-வுக்கு ரூ.25 கோடி வரை பேரம் பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

பெரும்பான்மையை நிரூபிப்போம்
ஆனால், பஞ்சாபில் தேர்தல் நேரத்தில் கூட, எதிர்க்கட்சிகள் மக்களுக்கு லஞ்சம் கொடுக்க பெரும் பணம் மற்றும் பிற பொருட்களை வைத்திருந்தனர், ஆனால் மக்கள் அவர்களை நிராகரித்து, ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கையை ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து காப்போம். பஞ்சாப் மக்கள் முன் இந்த நம்பிக்கையை சட்டப்பூர்வமாக முன்வைக்க, செப்டம்பர் 22ம் தேதி மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ளோம். அதில் நாங்கள் எங்களின் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று தெரிவித்தார்.

டெல்லி அரசு
சில வாரங்களுக்கு முன் இதேபோல் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது. குஜராத் தேர்தல் நெருங்கி வரும்ம் சூழலில், பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன்மூலம் பாஜக திட்டத்தை முறியடித்துள்ளோம் என்பதை மக்களுக்கு காட்டுவகையில் இந்த நடவடிக்கை அமையும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பகவந்த் மான் வீடியோ வெளியீடு
இந்த நிலையில் ஆபரேசன் தாமரையை முறியடிக்கும் வகையில், பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களாக, பஞ்சாபில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அரசை கவிழ்க்க, பாஜகவினர் எப்படி ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை அணுக முயன்றனர், லஞ்சம் கொடுக்க முயன்றார்கள் என்பதை மக்கள் பார்த்திருப்பார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications