சூப்பர்! பகத் சிங் கிராமத்தில் முதல்வராக பதவியேற்கும் பகவந்த் மான்! கட்சியினருக்கு முக்கிய அட்வைஸ்
சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வராக வரும் மார்ச் 16இல் பதிவேயற்க உள்ள ஆம் ஆத்மியின் பகவந்த் மான், தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப். 20இல் நடைபெற்ற சட்டசபை நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மார்ச்10இல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 117 இடங்கள் உள்ள நிலையில், ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
பஞ்சாபில் காங். மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

பகத் சிங் மண்
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்குப் பின்னர் டெல்லி சென்ற ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் டெல்லி சென்று ஆம் ஆத்மி அரவிந்த் ஜெர்விவாலை சந்தித்து வாழ்த்து பெற்றார். இன்று (மார்ச் 12) பஞ்சாப் ஆளுநரைச் சந்தித்து பகவந்த் மான் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். வரும் மார்ச் 16ஆம் தேதி, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த கிராமமான கத்ஹர் கலனில் பதவியேற்பு விழா நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

ஆணவம் கூடாது
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், "நாம் எங்குச் சென்று மக்களிடம் வாக்கு கேட்டுமோ, இப்போது அதே பகுதியில் தான் வேலை செய்ய வேண்டும். எம்எல்ஏக்கள் எப்போதும் தலைநகர் சண்டிகரில் முகாமிட்டு இருக்கக் கூடாது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் பணியாற்ற வேண்டும். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஆணவம் கொள்ளக் கூடாது. வாக்களித்தவர்கள், வாக்கு அளிக்காதவர்கள் என அனைவருக்கும் நாம் பணியாற்ற வேண்டும்.

அமைச்சர்கள்
நீங்கள் பஞ்சாப் மக்களின் எம்எல்ஏக்கள். அவர்கள் தான் இந்த அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பஞ்சாபில் முதல்வர் தவிர அதிகபட்சம் 17 கேபினட் அமைச்சர்களை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். எனவே, தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என யாரும் கோபப்பட வேண்டாம், என்னைப் பொருத்தவரை நீங்கள் அனைவரும் கேபினட் அமைச்சர்கள் தான். நாம் அனைவருமே பஞ்சாப் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும்" என்றார்.

முதல்முறை
கடந்த 60 ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கட்சி இத்தனை இடங்களில் வெல்வது இதுவே முதல்முறையாகும். காங். ஆட்சியில் முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களையும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தோற்கடித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதன் மூலம் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருக்கும் ஒரே கட்சியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மாறியுள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications