Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது வெறும் ஒன்னு, இரண்டா? பஞ்சாப்பில் பாஜகவிற்கு காத்திருக்கும் இடி.. ஏபிபி - சி வோட்டர் சர்வே!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்குமென்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் மொத்தம் 117 இடங்களுக்கு நடக்க உள்ளது. வரும் பிப்ரவரி 14ம் தேதி இந்த சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மார்ச் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த முறை பஞ்சாப் தேர்தலில் பல முனை போட்டி நிலவ போகிறது. அங்கு தற்போது வரை நான்கு முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படுகிறது. இன்னொரு பக்கம் அமிரிந்தர் சிங்கின் லோக் காங்கிரசும் போட்டியிடுகிறது.

என்ன கணிப்பு

என்ன கணிப்பு

இந்த நிலையில் ஏபிபி சி வோட்டர் சர்வேபடி பஞ்சாப்பில் இந்த முறை தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. அங்கு ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து டெல்லி தலைமையின் முடிவுகளுக்கு எதிராக செயல்படுவதால் அங்கு பஞ்சாப் பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் தோல்வி

பஞ்சாப் தோல்வி

இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவாக முடியும். அதே சமயம் விவசாயிகள் மத்தியில் ஆதரவு கொண்ட சிரோன்மணி அகாலி தளம் கட்சி இந்த முறை பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆம் ஆத்மி கட்சி 52-58 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அங்கு 114 இடங்கள் உள்ளது. மெஜாரிட்டி பெற 114 இடங்களில் வெல்ல வேண்டும்.

மெஜாரிட்டி

மெஜாரிட்டி

இதனால் ஆம் ஆத்மி அதிக இடங்களை வென்றாலும் மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி 37-43 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி தொடர்வது கொஞ்சம் சந்தேகம்தான். அமரீந்தர் சிங் போனது அக்கட்சி பெரிய பின்னடைவாகும் என்று கூறப்படுகிறது. குறைந்த இடங்களை வென்றாலும் சிரோன்மணி அகாலிதளம் கிங் மேக்கராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அந்த கட்சிக்கு 17-23 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

 பாஜக கூட்டணி

பாஜக கூட்டணி

இந்த கட்சி முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பாஜக வெறும் 1, 2 அல்லது அதிகபட்சம் 3 இடங்களை மட்டுமே வெல்லும் என்று ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. விவசாய சட்டங்கள் ரத்து ஆனாலும் கூட பஞ்சாப் விவசாயிகள் பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

பஞ்சாப் பாஜக

பஞ்சாப் பாஜக

பஞ்சாப்பில் பாஜக கூட்டங்களை கூட நடத்த முடியாத அளவிற்கு அங்கு விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் பஞ்சாப்பில் பாஜக அரசியல் கூட்டங்களை நடத்துவது கடுமையாகி உள்ளது. பிரதமர் மோடியே பாதுகாப்பு காரணங்களால் திரும்பி செல்லும் அளவிற்கு அங்கு பாஜக மீது எதிர்ப்பு நிலைப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் பாஜக வெறும் 1-3 இடங்களில் வென்று மோசமான தோல்வியை தழுவும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+