நாங்க ஆட்சிக்கு வந்தா பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்! ஸ்டாலினை ஃபாலோ செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்
சண்டிகர் : பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கு தேர்தல் நடத்த செய்திகளை அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மே மாதம் சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி அங்கு தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்
பஞ்சாப் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 29-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 28ஆம் தேதி நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. எனக்கு ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அம்ரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போதைய முதல்வராக சரண்ஜித்சிங் சன்னி உள்ளார். காங்கிரஸில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பஞ்சாயத்து இன்னும் நடைபெற்று வரும் நிலையில் சன்னி நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தங்களை முதல்வர் வேட்பாளராகவே நினைத்து வலம் வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் மும்முரம்
காங்கிரஸ் மட்டுமல்லாது இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் மற்றும் அம்ரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் உள்ளிட்டவை களம் கண்டு பலப்பரீட்சை நடத்துகின்றன. வேட்பாளர் தேர்வு , பிரச்சாரம், வாக்காளர்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் என அனுதினமும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் டெல்லியை போன்று எப்படியாவது பஞ்சாபிலும் ஆட்சி அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி முனைப்பு காட்டி வருகிறது.

ஆம் ஆத்மி அறிவிப்பு
இதையடுத்து அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பஞ்சாபின் முகாமிட்டு தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் அவ்வப்போது வாக்காளர்கள் கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்ற நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி நிறுவனம் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலினை பின்பற்றும் அரவிந்த் கெஜ்ரிவால்
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதே பாணியை கையில் எடுத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்ததுபோல கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலமாக பஞ்சாபில் இந்த முறை கண்டிப்பாக ஆட்சி அமைக்க வேண்டுமென திட்டமிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications