"கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் தேவை.." டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபர கருத்து
சண்டிகர்: எந்த தரப்பும் பாதிக்காத வகையில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும் என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.
இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே, ஆட்சியைத் தக்க வைக்க அக்கட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பஞ்சாப் தேர்தல்
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக முக்கிய போட்டியாளராக இல்லை. இருந்த போதிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அங்கு கடும் போட்டி தருகிறது. கடந்த 2017 சட்டசபைத் தேர்தலிலேயே அகாலி தளம் கட்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆம் ஆத்மி 2ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

சட்டம் தேவை
இந்நிலையில், ஜலந்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மதமாற்றம் தொடர்பாகத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "மதம் என்பது தனிப்பட்ட விஷயம். கட்டாய மத மாற்றங்களுக்கு எதிராகக் கண்டிப்பாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும், ஆனால் இதன் மூலம் யாரும் தவறாகத் துன்புறுத்தப்படக் கூடாது. ஒருவரை அச்சுறுத்தி மதமாற்றம் செய்வது தவறானது. அதைத் தடுக்கும் வகையிலேயே சட்டம் இயற்றப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி வழிபட உரிமை உண்டு" என்றார்.

மாநிலங்கள்
மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் என்பது பல ஆண்டுகளாகவே விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் உத்தரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் பல மாநிலங்களில் கட்டாய மத மாற்றங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களும் இது குறித்து ஆலோசித்து வருகின்றன.
Recommended Video

ஆம் ஆத்மி மாடல்
தொடர்ந்து பஞ்சாபிற்கு ஆம் ஆத்மி வைத்துள்ள திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "பஞ்சாப் மாநிலத்தில் சுகாதார உட்கட்டமைப்பு மிக மோசமாக உள்ளது. பஞ்சாப் மக்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் 16000 கிளினிக்குகளை உருவாக்குவோம். மாநிலத்தில் மோசமான நிலையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தையும் நாங்கள் புதுப்பிப்போம் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் டெல்லியைப் போலவே பஞ்சாபிற்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். நாங்கள் இந்தத் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் போது புதிய வரிகளை விதிக்கப்பட மாட்டாது" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications