பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான் - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் இன்று பதவியேற்றுக்கொண்டார். விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கிராமத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கிராமத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று பகவந்த் மானுடன் 16 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மஞ்சள் நிற டர்பன் அணிந்தும் பெண்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்தும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications