Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தீஸ்கரில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதி விபத்து.. பலர் மரணம்.. என்ன நடந்தது! முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர் என்ற இடத்தில் ரயில் விபத்து நடந்துள்ளது. பயணிகள் ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே அதிகாரிகள், மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

நமது நாட்டில் ரயில் விபத்துகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு தான் பீகாரில் மிக மோசமான ஒரு ரயில் விபத்து நடந்தது. இந்த விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்திருந்தனர். ரயில் விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியே வருகிறார்கள்.

train accident Chhattisgarh

ரயில் விபத்து

இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் மோசமான ரயில் விபத்து நடந்துள்ளது. சத்தீஸ்கரில் பிலாஸ்பூர் என்ற இடத்தில் லோக்கல் பயணிகள் ரயில், சரக்கு ரயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 20+ பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே விபத்து குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பிலாஸ்பூர்-காட்னி செக்ஷனில் உள்ள லால் கதாண் பகுதிக்கு அருகே தான் விபத்து நடந்துள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது லோக்கல் ரயில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. லோக்கல் ரயில் என்பதால் அது அதிவேகமாக வரவில்லை. இதன் காரணமாகவே பாதிப்புகள் மோசமாக இல்லை.

சேதம்

ரயில் வேகமாக வந்து மோதியதால் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் சரக்கு ரயில் மீதே ஏறிவிட்டன. இதனால் பயணிகள் ரயிலில் இருந்தவர்கள் பீதியடைந்தனர். இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. மேலும், ரயில்களுக்குப் பயன்படும் மின்சார கேபிள்களும் மிக மோசமாக சேதமடைந்தன. இதனால் அந்த அப்பகுதியில் ரயில் சேவை முழுமையாக முடங்கியது.

லோக்கல் ரயில் சிக்னலைத் தாண்டிச் சென்றதே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. சிக்னலை மீறி சென்று அது நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள்

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் ரயில்வே மீட்புக் குழுவினர், ரயில்வே போலீஸ் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ரயில்வே உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

உதவி எண்கள்

இதற்கிடையே ரயில் விபத்தில் காயமடைந்தோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா சந்திப்பு உதவி எண்: 808595652

ராய்கர்: 975248560

பெந்த்ரா சாலை: 8294730162

விபத்து நடந்த இடம்: 9752485499, 8602007202 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம்

இந்த ரயில் விபத்தால் அந்த செக்ஷனில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்தில் ரயில்கள் அகற்றிவிட்டு, அங்கு மீண்டும் ரயில் போக்குவரத்தைத் தொடங்கத் தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+