விடியோ ஆதாரம் சிக்கிருச்சு.. தேர்தல் முடிவை மாற்றி பாஜகவை வெற்றிபெற வைத்த அதிகாரி! காங்கிரஸ் பகீர்
சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலின் அதிகாரி மோசடியில் ஈடுபட்டு பாஜகவை வெற்றிபெற செய்ததாக கூறி வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டு வருகிறார்கள்.
அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் தலைநகராக இருப்பது சண்டிகர். அதே சமயம் சண்டிகர் யூனியன் பிரதேசமாகவும் உள்ளது. இப்படி வட இந்தியாவில் புவியியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் என பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருக்கும் இங்கும் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவுக்கும் இந்தியா கூட்டணி (காங்கிரஸ் + ஆம் ஆத்மி) ஓரணியில் கடும் போட்டி நிலவியது.

இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் குல்தீப், பாஜக சார்பில் மனோஜ் சோங்கர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் + ஆம் ஆத்மி கூட்டணிக்கு 20 வாக்குகளும் பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இதனால் இந்தியா கூட்டணிக்கு மேயர் பதவி கிடைக்கும் என்பதில் இரு கட்சியினரும் உறுதியாக இருந்தன. இந்த நிலையில் தேர்தல் அதிகாரி இந்தியா கூட்டணிக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 செல்லாது என அறிவித்தார். இதன் காரணமாக பாஜகவை சேர்ந்த வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றிபெற பாஜகவை தலைமை அதிகாரி எப்படி கையாளுகிறார் என்பதை நாட்டு மக்கள் கேமராவில் பார்க்க வேண்டும். தலைமை அதிகாரி பல வாக்குகளில் பேனாவைப் பயன்படுத்துவதை வீடியோவில் காணலாம்.
— SaveTheNation/தேசம் காப்போம் (@niayayakkural) January 30, 2024
சிலர் EVM மோசடி கோட்பாடுகளை நம்பவில்லை என்றாலும், மேயர் தேர்தலில் பட்டப்பகலில்… pic.twitter.com/swY2MKPeor
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் அதிகாரியின் இந்த முடிவு குறித்து ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா கூறுகையில், "சண்டிகர் மேயர் தேர்தலில் முதன்முறையாக 36 வாக்குகளில் 8 செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி 20 வாக்குகள் பெற்று இருந்தது. ஆனால், எங்களுக்கு கிடைத்த வாக்குகளில் 12 வாக்குகள் செல்லும் என்றும் 8 வாக்குகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டன. ஆனால், பாஜகவின் ஒரு வாக்கு கூட செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவிக்கவில்லை." என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி ஆதரவு எக்ஸ் பக்கமான தேசம் காப்போம் தேர்தல் அதிகாரியின் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, "சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றிபெற பாஜகவை தலைமை அதிகாரி எப்படி கையாளுகிறார் என்பதை நாட்டு மக்கள் கேமராவில் பார்க்க வேண்டும். தலைமை அதிகாரி பல வாக்குகளில் பேனாவைப் பயன்படுத்துவதை வீடியோவில் காணலாம். சிலர் EVM மோசடி கோட்பாடுகளை நம்பவில்லை என்றாலும், மேயர் தேர்தலில் பட்டப்பகலில் பிஜேபி வெற்றி பெற்ற விதம், 2024 பிரதமர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு EVMயில் மோசடி செய்யமாட்டார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?
தேர்தல் ஆணையம் இந்த மோசடிகளை நிறுத்தும் வரை, முழுமையான தேர்தல் புறக்கணிப்புக்கு நான் வலுவாக ஆதரிக்கிறேன். பிஜேபி தார்மீகத்தை இழந்துவிட்டது. இப்போது மேயர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு கீழ்நிலையில் நின்றுவிட்டார்கள்! தன்னை ராமர் பக்தன் என்று சொல்லிக் கொள்ளும் மோடி ஜி ஏன் இப்படி ஏமாற்றுகிறார்? ராமரின் கொள்கைகளை பின்பற்றவில்லை என்றால் அவர் எப்படி ராம பக்தர்?
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், இது ஏமாற்றத்தை விட அதிகம். நடைமுறையை நிலைநிறுத்த வேண்டிய அதிகாரிகள் சிக்கும்போது, அது தேர்தல் முறையின் நம்பிக்கை மற்றும் நேர்மையின் அடித்தளத்தையே உலுக்கி விடுகிறது. தேர்தல் தலைமை அதிகாரி, பேலட் வாக்குகளில் கூடுதலாக மார்க் செய்து, இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என அறிவித்தார், பாஜக 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்." என்று குறிப்பிட்டு உள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications