யார்னு பாருங்க.. "அவர் நல்லாயிருக்கணும்" விழிவிரிய வைத்த "முதல்வரின்" மாஜி மனைவி.. உருகும் பஞ்சாப்
பஞ்சாப் முதல்வராக பதவியேற்கும் பகவந்த்திற்கு மாஜி மனைவி வாழ்த்து சொல்லி உள்ளார்
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்சிங் பதவியேற்ற நிலையில், அவரது மாஜி மனைவி திடீரென உருகி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது...
இதில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ்
பஞ்சாப்பின் இந்த வெற்றி, காங்கிரஸை அதிர வைத்து வருகிறது.. மேலும் காங்கிரஸ் தரப்பின் அனைத்து கோட்டைகளையும் மெல்ல மெல்ல குறி வைத்து தட்டி தூக்கி வருகிறது ஆம் ஆத்மி. தற்போது, பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த்மான் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்... கட்டர்காலனியில் நடக்கும் விழாவில் பகவந்த்மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அம்பேத்கர்
இதுகுறித்து பகவந்த் மான் சொல்லும்போது, பகத்சிங்கின் கிராமமான கட்டர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன்... ராஜ்பவனில் கிடையாது.. பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் போட்டோக்கள் இருக்காது, அதற்கு பதிலாக பகத் சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் போட்டோக்கள் மட்டுமே இருக்கும் என்று கூறியிருந்தார்.

பாதுகாப்பு பணி
அதன்படியே, இன்றைய பதவியேற்பு நாளில், அவர் சொன்னபடியே சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங் பிறந்த ஊரான கட்டர் கலானில் பதவி ஏற்பு விழா ஜரூராக நடக்கிறது.. சுமார் 3 லட்சம் பேர் இவ்விழாவில் பங்கேற்பார்கள் என்று ஏற்கனவே கூறப்பட்டது.. இதற்காகவே 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.. இதைதவிர, வாகனங்களை நிறுத்துவதற்காக 50 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது... 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பகவந்த்மான்
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று பகவந்த் மான் அழைப்பு விடுத்துவிட்டு வந்தார்.. இந்நிகழ்விற்கு வரும் ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகை கட்டி வரவேண்டும் என்றும்,பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டா அணிந்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டும் இருந்தது.. இன்று பஞ்சாபின் முதல்வராகும் பகவந்த் மான், பல விமர்சனங்களில் சிக்கியவர்.. சர்ச்சைக்கு பெயர் போனவர்.. போதைக்கு அடிமையானவர் என விமர்சிக்கப்பட்ட காமெடி நடிகர் ஆவார்..

மது, மனைவி
குடிகாரர், பொறுப்பில்லாதவர் என்று அந்த மாநில மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.. எந்நேரமும் போதையிலேயே இருப்பதாக கூறி, அவரது தள்ளாடும் வீடியோக்களும் வெளியாகின.. இனிமேல் தண்ணி அடிக்க மாட்டேன் என்று அம்மா மீது சத்தியமெல்லாம் செய்தார். எனினும், மதுவால் மனைவியை இழந்தவர் இவர்தான்.. 2015-ல் விவாகரத்து செய்தார். இந்திரஜித் கெளரை மணந்தார். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி பகவந்த் மானிடம் இருந்து பிரிந்து அமெரிக்காவில் வசிக்கிறார். பகவந்த் மான் தன்னுடைய அம்மாவுடன் சதோஜ் கிராமத்தில் வசித்து வருகிறார்.

உருகிய மனைவி
இப்போது, பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவரது மகன் தில்ஷன் மான், 17 வயது, மகள் சீரத் கவுர் மான் 21 வயது, இருவரும் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கின்றனர். தன்னுடைய கணவர் பஞ்சாப் முதல்வராவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் இந்தர்ப்ரீத் கவுர்.. அவர் எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும் நல்லா இருக்கணும், அவருக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன் என்று உருக வைத்துள்ளார் மாஜி மனைவி.

உருகிய மனைவி
இப்போது, பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவரது மகன் தில்ஷன் மான், 17 வயது, மகள் சீரத் கவுர் மான் 21 வயது, இருவரும் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கின்றனர். பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பதவியேற்பு விழாவில் தன்னுடைய தந்தையை பார்த்து இருவருமே பூரித்து போனார்கள். அதேபோல, தன்னுடைய கணவர் பஞ்சாப் முதல்வராவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் இந்தர்ப்ரீத் கவுர்.. அவர் எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும் நல்லா இருக்கணும், அவருக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன் என்று உருக வைத்துள்ளார் மாஜி மனைவி.

விரும்பவில்லை
மனம் ஒத்து 2 பேரும் விவாகரத்து செய்தவர்கள் என்பதால், விவாகரத்து கிடைத்தவுடன் மனைவியுடன் சேர்ந்து வாழ பகவந்த்சிங் விரும்பவில்லை.. அப்போதே இதுகுறித்து கூறும்போது, "நான் சங்ரூரில் இருக்கிறேன்.. எனக்கு அமெரிக்காவில் போய் தங்க முடியாது. அவராலும் இங்கு வந்து செட்டிலாக முடியாது... எனக்கு எனது குடும்பத்தை விட பஞ்சாப்தான் முக்கியம். அதுதான் எனது குடும்பம். இந்த 2 குடும்பத்தில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.. அதனால்தான், பஞ்சாப் குடும்பத்தை தேர்ந்தெடுத்து விட்டேன். கோர்ட் எங்களுக்கு விவாகரத்து தந்துவிட்டது.. நாங்களும் விருப்பப்பட்டுதான் பிரிகிறோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications