பஞ்சாப்: 32 எம்எல்ஏ-க்கள்.. ஆட்சியை கவிழ்ப்பீங்களோ? போதை பொருள் கேஸ்- காங்கிரஸை கதறவிடும் ஆம் ஆத்மி!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 32 எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை கவிழ்ப்போம் என காங்கிரஸ் கட்சி மிரட்டியிருந்தது. இந்த மிரட்டலுக்கு பதிலடியாக மூத்த காங்கிரஸ் தலைவரை போதைப் பொருள் வழக்கில் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டது ஆம் ஆத்மி அரசு.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர் பிரிவினைவாதம் பெரும் தலைவலியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கனடா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருக்கும் சீக்கிய பயங்கரவாதிகள் இந்தியாவுக்கும் பஞ்சாப் மாநிலத்துக்கும் குடைச்சலாக இருந்து வருகின்றனர்.

பஞ்சாப்பில் அரசியல் குழப்பம்: இது போதாது என பஞ்சாப் மாநிலத்தில் அரசியல் குழப்பங்களும் அரங்கேறத் தொடங்கிவிட்டன. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் "இந்தியா" கூட்டணியில்தான் இருக்கின்றன. ஆனால் இரு கட்சிகளும் பாஜகவைவிட பயங்கரமான எதிரி கட்சிகள் போல முட்டி மோதுகின்றன.
32 எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 32 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருக்கின்றனர்; எந்த நேரத்திலும் ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என எதிர்க்கட்சித் தலைவரான பிரதாப் சிங் பாஜ்வா எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இதனை ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக நிராகரித்து காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது: இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் சுக்பால் கெய்ராவை, 8 ஆண்டுகளுக்கு முந்தைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இன்று பஞ்சாப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கெய்ராவின் வீட்டுக்கு பஞ்சாப் போலீசார் கைது செய்ய சென்ற போது கடும் மோதல் ஏற்பட்டது. கெய்ராவின் வீட்டுக்குள் போலீசார் நுழைந்தது முதல் கைது செய்யும் வரை அத்தனை காட்சிகளையும் அவரது மகன் சமூக வலைதளங்களில் லைவ்வாக ஒளிபரப்பு செய்தார். 8 ஆண்டுகளுக்கு முந்தைய கைவிடப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்பால் கெய்ராவை ஆளும் ஆம் ஆத்மி அரசு கைது செய்திருப்பது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் பஞ்சாப்பில் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா கூட்டணி காலி: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆத்மி- காங்கிரஸ் இடையேயான இந்த தொடர் மோதல்களால் இம்மாநிலத்தில் "இந்தியா" கூட்டணி என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போய்விட்டது என பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications